மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் அதிகளவில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை வழக்கத்திற்கு மாறான முறையில் திறந்துவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ நுகேொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை வெளிப்படுத்தினார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, வெப்ப மின் உற்பத்தி குறைந்துள்ளதைக் ஈடுகட்டும் ஒரு தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். கடந்த மார்ச் 24ஆம் திகதி விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“தரம் குறைந்த நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகும் என்பதால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தும்போது ஏற்படும் எதிர்ப்பைத் தவிர்க்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக கடல் மட்டத்திலிருந்து 422 மீற்றர் மட்டத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த மட்டம் குறையக்கூடும்” என அவர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்காக அதிக நீர் பயன்படுத்தப்படுவதால், கண்டி, குண்டசாலை மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல நீரேந்து நிலையம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் சுமார் 17,000 நீர் இணைப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாளாந்தத் தேவையான 12,000 கன மீற்றர் நீருக்குப் பதிலாக 500 கன மீற்றர் மாத்திரமே விநியோகிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல்லேகல முதலீட்டு வலயத்திலுள்ள சில தொழிற்சாலைகள் நீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மூடப்பட்டதாகவும், இதன் விளைவாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தெம்பே நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவத்தில் சிக்கல் ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த துமிந்த நாகமுவ, இந்த முட்டாள்தனமான முடிவை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்