மஹிந்தவின் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வருமென்றார் பிரகீத் எக்னெலிகொட – விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தினால் நாட்டின் ஆட்சியினை மாற்றி நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என பிரகீத் எக்னெலிகொட தன்னிடம் கூறியதாக விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னாள் உறுப்பினரான முரளி என்பவர் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதியன்று சாட்சியம் அளித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் எக்னெலிகொடவும் தானும் சகோதரர்களைப் போல் பழகியதாகவும், தங்களது இந்த நட்பு தமிழ்செல்வன் உள்ளிட்ட அமைப்பின் உயர் தலைவர்களுக்கும் தெரிந்திருந்தது என்றும் சாட்சியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

தலைமை நீதிபதி நயனா செனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோரைக் கொண்ட நிரந்தர நீதாய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு முறைப்பாட்டாளரின் சாட்சியாளராக சாட்சியமளிப்பதற்காக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே இன்று கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியங்களை வழிநடத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, சுரேஷ் சலே ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சபையின் பணிப்பாளராகப் பணியாற்றிய காலம் எதுவென வினவினார்.

2012 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டின் இறுதி வரை என சலே அதற்குப் பதிலளித்தார்.

பின்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், கிரிதலே கவசப் படைப் புலனாய்வுப் படையணி பற்றித் தெரியுமா என வினவினார்.

அதற்குப் பதிலளித்த சலே, மூன்று நான்கு முறை அங்கு சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

பின்னர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைக்குரிய தகவல்களை வழங்கியது நினைவிருக்கிறதா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கேட்டார்.

விசாரணை ஒன்று இடம்பெற்றது நினைவிருப்பதாகவும், அது தொடர்பான தொலைபேசித் தரவு அறிக்கைகளை வழங்கியதாகவும் சாட்சியாளரான சலே தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளின் போது சலே பின்வருமாறு குறிப்பிட்டார்:

“ஐயா, எனது 38 கால சேவைக்காலத்தில் நான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துடன் (CID) பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். பல வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளேன். பல ஆவணங்களை வழங்கியுள்ளேன். இச்சம்பவம் தொடர்பாகவும் விசாரணைக் குழு (Court of Inquiry) ஒன்று அமைக்கப்பட்டது. அதற்குரிய தகவல்களும் கையளிக்கப்பட்டன. ஆனால் தற்போது இச்சம்பவம் நடந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால், வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களைச் சரியாகப் பார்க்காமல் கூற முடியாது.” என்றார்.

சாட்சியமளித்த பின்னர் சுரேஷ் சலே மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, இவ்வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பின் 4வது சாட்சியாளரான சுமத்திபால சுரேஷ் குமார் என்ற முரளியிடம் 9வது பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அசித் சிறிவர்தன இன்றைக்கும் குறுக்குக் கேள்விகளை எழுப்பினார்.

“நீங்கள் எல்.டி.டி.ஈ அமைப்பின் உறுப்பினராக இருந்த காலத்தில் பிரகீத் எக்னெலிகொட என்ற நபருடன் சகோதரரைப் போல் பழகிய காலம் ஒன்று இருந்தது தானே?”

அதற்கு சாட்சியாளர், “ஆம் ஐயா” எனப் பதிலளித்தார்.

“அப்போது அவருடன் யுத்த களத்தில் உங்களது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டீர்கள் தானே?” என சட்டத்தரணி மீண்டும் வினவினார்.

அதற்கும் சாட்சியாளர் ‘ஆம்’ எனப் பதிலளித்தார்.

பின்னர் சட்டத்தரணி, “பிரகீத் எக்னெலிகொடவுடனான தொடர்பு குறித்து எல்.டி.டி.ஈ அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் சொன்னீர்களா?” எனக் கேட்டார்.

சாட்சியாளரான முரளி அதற்கு ‘இல்லை’ எனப் பதிலளித்தார்.

மீண்டும் கேள்வியெழுப்பிய சட்டத்தரணி, “எக்னெலிகொடவுடனான தொடர்பு பற்றி தமிழ்செல்வன் மற்றும் எல்.டி.டி.ஈ அமைப்பின் வெடிபொருள் பிரிவின் பிரதானியாக இருந்த ஞானவேலிடம் கூறியிருந்தீர்களா?” எனக் கேட்டார்.

அவர்கள் இருவரிடமும் அது பற்றிக் கூறியிருந்ததாக சாட்சியாளர் தெரிவித்தார்.

“பொட்டு அம்மான்தானே கொலைகாரப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகவும் தற்கொலை குண்டுதாரிகளை இயக்கியவராகவும் இருந்தார்?” என சட்டத்தரணி வினவியபோது, “அது பற்றி எனக்குத் தெரியாது” என சாட்சியாளர் பதிலளித்தார்.

மீண்டும் கேள்வியெழுப்பிய சட்டத்தரணி அசித் சிறிவர்தன, “நீங்கள் எக்னெலிகொடவுடன் வைத்திருந்த சகோதர பிணைப்பு மற்றும் நட்பு பற்றி பொட்டு அம்மான் என்பவரிடம் கூறியிருந்தீர்களா?” எனக் கேட்டார்.

அதற்கு சாட்சியாளரான சுரேஷ் குமார் என்ற முரளி பதிலளித்தார்.

“நீங்கள் தம்புள்ளை, ஹபரணை தோட்டம் என்ற இடத்தில் எக்னெலிகொடவைச் சந்தித்தபோது, அவர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அப்போதைய நாட்டின் தலைவரைக் கொலை செய்ய வேண்டும் என உங்களிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்திருந்தீர்கள் அல்லவா?” என சட்டத்தரணி மீண்டும் வினவினார்.

அதற்கு சாட்சியாளர் ‘ஆம்’ எனப் பதிலளித்தபோது, “அப்போதைய நாட்டின் தலைவராக இருந்தது மஹிந்த ராஜபக்ஷதானே?” எனச் சட்டத்தரணி கேட்டார்.

சாட்சியாளரான முரளி ‘ஆம்’ எனப் பதிலளித்தார்.

எக்னெலிகொடவுடனான தொடர்பு பற்றி பொட்டு அம்மானிடம் கூறியது, எக்னெலிகொட அந்தப் பேச்சைப் பேசுவதற்கு முன்பா? அல்லது பின்பா? என சட்டத்தரணி மீண்டும் வினவ, அதற்கு ‘முன்பு’ என சாட்சியாளர் பதிலளித்தார்.

இதன் பின்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா அவரிடம் கேள்விகளை எழுப்பினார்.

“நீங்கள் ராணுவத்திடம் சரணடைவதற்கு முன்னர் எல்.டி.டி.ஈ புலனாய்வுப் பிரிவினருடன் சென்று ஹபரணையில் எக்னெலிகொடவைச் சந்தித்ததாக இன்று பிரதிவாதித் தரப்பு குறுக்குக் கேள்வி கேட்கும்போது கூறினீர்கள். அங்கு நாட்டின் தலைவரைக் கொலை செய்வது பற்றி எக்னெலிகொட கூறியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு முன்னர் ஒரு நாளில் முதலாவது பிரதிவாதி சார்பாக இச்சம்பவம் பற்றிக் கேட்டபோது, அது ஒரு உதாரணமாகக் கூறப்பட்ட ஒன்று என்றுதானே சொன்னீர்கள். அதை விளக்க முடியுமா?”

 

அதற்கு சாட்சியாளரான சுரேஷ் குமார் என்ற முரளி பின்வருமாறு கூறினார்:

“நானும், நாதன் ஐயாவும், எக்னெலிகொட ஐயாவும் ஹபரணை தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம். நானும் நாதன் ஐயாவும் இப்போது போர் முடிந்துவிட்டதால் சுதந்திரமாக வாழலாம் என்று சொன்னோம். அப்போது எக்னெலிகொட, போர் முடிந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளும் அப்படியேதான் இருக்கின்றன என்றார். அதற்கு நானும் நாதனும், அவற்றை முடிவுக்குக் கொண்டுவரவோ மாற்றவோ முடியாது, இந்த ஆட்சி இன்னும் 20 ஆண்டுகளாவது நீடிக்கும் என்று சொன்னோம். அப்போது எக்னெலிகொட, இன்று நினைத்தால் இன்றே மாற்ற முடியும் என்றார். நாங்கள் எப்படி என்று கேட்டோம். ஜனாதிபதி விமானத்தில் (Flight) போகிறார், அதற்கு ஒரு ஏவுகணையை அடித்தால் எல்லாம் மாறிவிடும் என்று அவர் சொன்னார்” என்றார்.

867793981_1826855906111595_6657237902329207622_n

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

October 28, 2026

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி மீனவர்களை தேடிச் செல்லவுள்ள அணியினருக்கான பாதுகாப்பு சட்டைகளை (safety jacket)

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கை: நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு CIDக்கு உத்தரவு

October 28, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக குற்றப்புலனாய்வு

namal 22222222222

பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் – நீதிமன்றத்தில் அலி சப்ரி

October 28, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர். அலிசப்ரி நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை

gajendran

நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன்

October 28, 2026

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டுள்ள கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடு;ம்பத்தினருடன் இணைக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற

rajeevkanth

இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!–ரஜீவ்காந்

October 28, 2026

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கிருஸ்ணகுமாருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

batti land

மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்

October 28, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் மீதான துப்பாக்கிச் சூடுகள், அச்சுறுத்தல்கள் மற்றும்

image_7bb7d5bb0c

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது!

October 28, 2026

இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் 7 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கந்தசாமி

arr

மானிப்பாயில் போதைக் குளிசைகளுடன் இருவர் கைது

October 28, 2026

யாழ்ப்பாணம், மானிப்பாய் சென். பீட்டர்ஸ் வீதிக்கு அருகிலுள்ள பகுதியில், 500 போதை குளிசைகளுடன் 24 மற்றும் 26 வயதுடைய இருவர்

lal

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது !

October 28, 2026

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், அதனை ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே தாம்

2

இலங்கையின் ​சமூக ஊடகங்களில் குழந்தைகள் சுரண்டப்படுவதைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்!

October 28, 2026

​சமூக ஊடகங்கள் மூலம் வணிக ரீதியான லாபம் மற்றும் இணையப் பிரபலத்தைப் பெறுவதற்காகக் குழந்தைகள் பயன்படுத்தப்படும் Kid fluencing என்ற

ls

லண்டன் புறப்பட்ட விமானத்தை தடுத்த பறவை

October 28, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, புதன்கிழமை(28) ஆம் திகதி நண்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் லண்டன் நகரம் நோக்கிப் புறப்பட்ட,

M-K-Stalin

“SIR-ஐ ரத்து செய்து வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்!

October 28, 2026

சென்னை: நாடு முழுவதும் எஸ்ஐஆர் (SIR – Special Intensive Revision) நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மீண்டும் பழைய