போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பர்கி அணை படகு விபத்தில், 39 வயதான மெரினா மாஸ்ஸி என்ற தாய், தனது 4 வயது மகன் திரிஷானை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தும் அந்தத் தாய் ஏன் உயிரிழந்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ விபத்தின் கோரத்தையும் பாதுகாப்பு குறைபாட்டையும் அம்பலப்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த தருணத்தில் படகிற்குள் நீர் புகுந்தபோதுதான், ஊழியர்கள் அவசர அவசரமாக லைஃப் ஜாக்கெட் கட்டுகளைப் பிரித்துள்ளனர். அப்போது மெரினாவிற்கு ஒரு ஜாக்கெட் கிடைத்த நிலையில், அவரது மகனுக்குக் கிடைக்கவில்லை. தன் மகன் நீரில் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காக, தனது லைஃப் ஜாக்கெட்டிற்குள்ளேயே மகனை வைத்து அணைத்துக் கொண்டு மெரினா தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், இருவரின் எடையையும் தாங்க முடியாமல் அந்த ஜாக்கெட் நீரில் மூழ்கியதால், தாயும் மகனும் கட்டி அணைத்தபடியே சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளனர். “ஒரே லைஃப் ஜாக்கெட்டில் மகனுடன் உயிர் பிழைக்கப் போராடிய தாயின் பாசம் கண்ணீரை வரவழைக்கிறது” என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தால் இந்தத் துயரம் தவிர்க்கப்பட்டிருக்கும் எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
#Jabalpur #BargiDam #BoatAccident #MotherLove #MarinaMassey #SafetyNegligence #LifeJacket #Tragedy #MadhyaPradesh #BreakingNews #May3 #NarmadaRiver #Heartbreaking #DelhiTourism #SafetyFirst #RescueOperation #MotherSonBond #SocialMediaViral #JusticeForVictims #May4Update_