திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடியிருப்பு (குடில்) ஒன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை காஸ்ஸப தேரர், செவ்வாய்க்கிழமை (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை காஸ்ஸப தேரர் தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், தமக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த நிபந்தனையுடனான பிணை நிபந்தனைகளை மீறியமைக்காகவும், திருகோணமலை நீதிமன்றம் மற்றும் அநுராதபுர நீதிவான் ஆகியோரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காகவும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த இரு தவறுகளுக்காகவும் தேரர் மன்னிப்பு கோரியதைக் கவனத்தில்கொண்ட திருகோணமலை நீதிமன்றம், அவரைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.