நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார் – அர்ச்சுனா M.P

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கலவரங்களைச் செய்த ஜே.வி.பி. (JVP) தரப்பினர், எங்களுக்கு மாகாணசபையைப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். அதேவேளை, மாகாணசபை தேர்தல் நடத்தப்படமாட்டாது என்பதுடன், நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ‘வொய்ஸ் ஒப் மீடியா’ ஊடக நிறுவனத்தில்  திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;

“ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதேவேளை, மாகாணசபை தேர்தல் இந்த வருடம் நடக்கும் என எதிர்பார்த்தோம்; அது மார்ச் மாதம் நடக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால், இந்த முறை வரவு-செலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதுடன், வடக்கில் நான்கு மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்தியுள்ளது. எனவே, மாகாணசபை தேர்தல் நடக்காது என்பது தெளிவாகிறது.

இந்த ஜே.வி.பி. கட்சியினர் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி, பிரதமர் உட்பட நீதித்துறையையும் தங்கள் கையில் வைத்துள்ளனர்; அத்தகைய பலத்தை மக்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளனர். ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா தனது உரையில், இளைஞர்கள் முழு விளக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, அதிலிருந்து விலகி அவர்கள் பாராளுமன்றத் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ நடத்த மாட்டார்கள் என்ற நிலைமைதான் காணப்படுகிறது.

அதேவேளை, நாமல் ராஜபக்ஷவை இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைப்பதே அவர்களின் முக்கியமான நோக்கமாகும். அதற்கு ‘ரையல் பார்’ (Trial-at-Bar) போன்ற முறைகளைக் கொண்டுவந்து, அவரை ஒருபோதும் வெளியில் விடப்போவதில்லை.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார். சிங்கள மக்கள் மத்தியில் எந்த ஜனாதிபதி என்பது முக்கியமல்ல; மாறாக, மூன்று வேளையும் சோறு கிடைத்தால் போதும் என்ற நிலையே உள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய இந்த ஜனாதிபதியும் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு அதிக காலம் எடுக்காது.

நான் ஒருநாளும் எந்தக் கட்சியிலும் இணையமாட்டேன். கட்சிகளில் இணைபவர்களைப் பார்த்தால், சுயமாகத் தேர்தலில் வெல்ல முடியாதவர்கள்தான் கட்சிகளில் சென்று இணைவார்கள். சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க போன்றோர் தமக்கடுத்த கட்சிகளில் இணைந்து வடக்கு – கிழக்குப் பகுதிகளைப் பொறுப்பேற்குமாறு என்னைக் கேட்டனர்.

நான் சுயேச்சையாகக் கொழும்பில் போட்டியிட்டு வெல்லக்கூடிய நிலையில் இருக்கிறேன். எனவே, இன்னொரு கட்சியில் சேர வேண்டிய தேவை எனக்கு இல்லை. என்னை நம்பி எனது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்; கட்சியைப் பதிவு செய்வதற்காகவும் அனுப்பியுள்ளோம். ஆதலால், எனக்கு எவருடைய கட்சியிலும் போய்ச் சேர வேண்டிய தேவை கிடையாது.

‘எதிரியின் எதிரி எனக்கு நண்பன்’ எனத் தேசியத் தலைவர் கூறுவார்; அவ்வாறு செயற்படுவதுதான் இராஜதந்திரம். அந்த வகையில், நாமலின் பரம எதிரி அநுரகுமார திஸாநாயக்க ஆவார். அநுர எனக்கு எதிரி என்ற ஒரே காரணத்திற்காக, நான் நாமலைத் தூக்கிப் பிடித்து அநுராவுக்குக் குத்து வெட்டு வேலைகளைச் செய்யப் போவதில்லை; எனவே, நான் போய் நாமல் ராஜபக்ஷவின் கட்சியில் இணையப் போவதில்லை.

எதிர்ப்பு அரசியல் செய்து என்ன மிஞ்சியது? எனவே, எதிர்ப்பு அரசியல் செய்ய நான் தயாரில்லை; அதேவேளை, தமிழ் தேசியவாதத்தைக் விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை. கார்த்திகை மாத உரை ஆரம்பித்ததே மாவீரர்களுக்காகத்தான். எனது தந்தை ஒரு மாவீரர். எனவே, முட்டாள்கள் செய்யும் அரசியல் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்காது. அரசியல் என்பது ஒரு இராஜதந்திரமாகும். முட்டாள்தனமாக இன்னார் கட்சி, மன்னார் கட்சி என்று மாலை போட்டுக் கொள்வது அரசியல் அல்ல.

நான் இப்போது செய்வது ஒரு இராஜதந்திரமான நகர்வாகும். எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவே நல்லுறவைப் பேணினர். எனவே, நான் ஒருபோதும் எந்தக் கட்சியுடனும் இணையப் போவதில்லை” என்றார்.

vetha111111

சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை – ஆளுநர்.

November 18, 2026

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், காணி மோசடி, மணல் மற்றும் மரக் கடத்தல், வாள்வெட்டுக் குழுக்களின்

d

2027 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ஆலோசகராக மகேந்திர சிங் தோணி!

November 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடருடனான தனது 19 ஆண்டுக்காலப் பயணத்தை நிறைவு செய்துள்ள மகேந்திர சிங் தோணி, 2027

acci main

மன்னார் பிரதான வீதியில் இராணுவ வாகனம் விபத்து: வீரர் ஒருவர் பலி; 11 பேர் காயம்

November 18, 2026

தலைமன்னார் – மன்னார் பிரதான வீதியின் கீளியன் குடியிருப்பு சந்தியில் இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர்

maveerar thuyulum illam

சாட்டி மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம்! பொலிஸாரின் தடை கோரும் மனுவில் சட்டத்தரணிகள் ஆட்சேபனை – வழக்கு நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

November 18, 2026

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக்

jud

சட்ட விரோதப் பணத்தில் வாங்கப்பட்ட ரூ. 40 மில்லியன் சொத்துகள் முடக்கம்!

November 18, 2026

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், தங்காலையைச் சேர்ந்த ‘லாரா’ என்றழைக்கப்படும் இந்திக பிரசாத் என்பவருக்குச்

kasya

மன்னிப்புக் கோரிய காஸ்ஸப தேரருக்குப் பிணை

November 18, 2026

திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடியிருப்பு (குடில்) ஒன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்த

sd

வெவ்வேறு விபத்துகளில் இரு நண்பர்கள் ஒரே நாளில் மரணம்!

November 18, 2026

குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த நண்பர்கள் இருவரும், யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற

En

முதல் தோல்வியை ஸ்பெய்னுக்கு இங்கிலாந்து பரிசளித்தது!

November 18, 2026

தொடர்ந்து 43 போட்டிகளாக தோற்காத ஸ்பெய்னுக்கு முதல் தோல்வியை இங்கிலாந்து பரிசளித்துள்ளது. ஸ்பெய்னில் நடைபெற்ற அவ்ணியுடனான தேசங்களுக்கான லீக்கின் ஏ3

a re

நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார் – அர்ச்சுனா M.P

November 18, 2026

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கலவரங்களைச் செய்த ஜே.வி.பி. (JVP) தரப்பினர்,

gas

எரிவாயு தேவையை சீராக பூர்த்திசெய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

November 18, 2026

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிலவக்கூடிய எரிவாயு தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், லிட்ரோ கேஸ் நிறுவனம் 45,000 மெட்ரிக்

o

ஆசிரியர் – அதிபர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

November 18, 2026

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்குப் பதவியுயர்வு பெறும் போது ஏற்படும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, மனிதவளம் மற்றும் மனித

death

கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு!

November 18, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்