இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடருடனான தனது 19 ஆண்டுக்காலப் பயணத்தை நிறைவு செய்துள்ள மகேந்திர சிங் தோணி, 2027 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைவதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பாகவே, செவ்வாய்க்கிழமை (17) சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தோணியின் தலைமையின்கீழ் ஐந்து தடவைகள் ஐ.பி.எல். சம்பியனாக மகுடம் சூடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இரண்டு தடவைகள் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றிருந்தது.
45 வயதான மகேந்திர சிங் தோணி, இதுவரை விளையாடிய ஐ.பி.எல். போட்டிகளில் 38.30 என்ற சராசரியுடன், 137.45 என்ற ஓட்ட வேகத்தில் (Strike Rate) மொத்தமாக 5,439 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.