மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச. காப்பாளருக்கு தண்டனை

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் அதிகார சபையின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் பயணித்து மன்னாரை வந்தடைந்த இரு பெண்கள், அதிகாலையில் தலைமன்னார் நோக்கிச் செல்வதற்காக அங்கிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் ஏற முற்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் முன்னதாகத் தனியார் பேருந்தில் பயணித்து வந்ததைக் காரணம் காட்டி, குறித்த காப்பாளர் பெண்கள் இருவரையும் இ.போ.ச. பேருந்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்தச் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எமது அதிகார சபையால் இலங்கை போக்குவரத்துச் சபையின் (வடக்கு) மன்னார் சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

“இந்த ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தாம் விரும்பும் போக்குவரத்துச் சேவையைத் தெரிவுசெய்து பயணம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதிலும் குறிப்பாக, அதிகாலை வேளைகளில் தொழில் நிமித்தமாகப் பயணம் செய்யும் பெண்கள், பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் பயணிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமையாகும்” எனத் தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

எமது பணிப்புரைக்கமைவாக, உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொண்ட மன்னார் சாலை முகாமையாளர், குறித்த இ.போ.ச. காப்பாளருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவருக்கு ஒரு நாள் ஊதியத்தைத் (வேதனம்) தண்டப்பணமாகவும் அறவிட்டுள்ளார் என்ற தகவல் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உரிமைகளை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை அதிகாரிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட இலக்கம்

இனிவரும் காலங்களிலும் பயணிகளிடம், குறிப்பாகப் பெண்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் பொதுமக்கள் எமது அதிகார சபைக்குத் தயக்கமின்றி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

அதற்காக விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தகுந்த ஆதாரங்களுடன் உங்களின் முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம். பொதுமக்களின் முறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த அதிகார சபை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்று தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3

“நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் தலைவர்கள் நீக்கப்பட்டது ஏன்?” – அமைச்சர் வன்னி அரசு அதிரடி விளக்கம்!

September 23, 2026

விழுப்புரம்: தவெக இடைத்தேர்தல் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசிகவின் மூத்த

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

“வேட்பாளர்கள் மீது வெறுப்பு இருந்தால் மக்கள் நிச்சயம் தீர்ப்பு தருவார்கள்” – திருமாவளவன் விளக்கம்!

September 23, 2026

சென்னை: மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது வெறுப்போ எதிர்ப்போ இருந்தால் மக்கள் நிச்சயம் அவர்களுக்கான தீர்ப்பைத் தருவார்கள் என்று விடுதலை

1

“பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை” – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 23, 2026

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடக்கக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றும், இது தொடர்பாக எந்த

so

சொய்சாபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ; ஒருவர் பலி

September 23, 2026

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் ‘C’ பகுதியில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்தத்

d

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வூட்

September 23, 2026

ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் அதிவேகப் பந்துவீச்சாளர்களிலொருவரான மார்க் வூட் ஓய்வு பெற்றுள்ளார். இதுவரையில் 38 டெஸ்ட்களில் 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய

image_0a63b4f949

ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் வியாஸ்காந்த்

September 23, 2026

ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். இதேவேளை நிரோஷன் டிக்வெல்ல, அஷேன் பண்டார, சாமிக கருணாரத்ன,

Mid photos new.00_01_24_41.Still114

“இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே முழு செலவையும் ஏற்க வேண்டும்” – தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசம்!

September 23, 2026

திருப்பூர்: சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு

kas

கொக்கட்டிச்சோலை கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

September 23, 2026

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் செவ்வாய்க்கிழமை (22) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

7

“தாராபுரம் இடைத்தேர்தல்: செப். 30-ல் முதலமைச்சர் விஜய் சூறாவளிப் பிரச்சாரம்!” – 54 ஏக்கரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட அரங்கம் அமைப்பு!

September 23, 2026

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதலமைச்சர் ச.ஜோசப்

anita ana

டிரம்பின் கருத்துக்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பதில்

September 23, 2026

டிரம்பின் கருத்துக்களுக்குப் பதிலளிக்குமாறு கேட்கப்பட்ட போது, ஒட்டுமொத்தக் குடியேற்றமானது “கனடாவின் செழிப்பை” உயர்த்தியுள்ள போதிலும், கூட்டாட்சி அரசாங்கம் 2024 ஆம்

trump june 26

கனடா “மில்லியன்கணக்கான” மக்களை அனுமதிப்பதன் மூலம் “தன்னையே அழித்துக் கொள்கிறது” – டிரம்ப் குற்றச்சாட்டு

September 23, 2026

கனடா “மில்லியன்கணக்கான மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பதன் மூலம் தன்னையே அழித்துக் கொள்கிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

Zafrans-NW-Posts-19

தமிழ்-கனடிய நெட்ஃபிலிக்ஸ் நட்சத்திரத்தைக் இலக்கு வைக்கும் இனவெறி கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அர்ச்சுனா

September 23, 2026

தமிழ்-கனடிய நடிகையான மைத்ரேயி இராமகிருஷ்ணனின் சர்வதேச சாதனைகளைக் குறித்து இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்