கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக கண்டிபொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பெரிய சுவரொன்றை நிர்மாணிப்பதற்காக மண் மேடொன்ற வெட்டும் போது திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்ணில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கண்டிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.