குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல் 4:00 மணி வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அமுலில் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
குருநாகல் மாவட்டம்: ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, கலவானை, இரத்தினபுரி, நிவித்திகலை, பெல்மதுளை மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.