மட்டு மாவட்ட வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரசு நிதி ஒதுக்கீடுகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆறு மல்வத்து ஓயாவா? மாதுரு ஓயாவா என தெரியாவதர்கள் எல்லாம் மட்டக்களப்பின் அபிவிருத்தியைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் 44 ஆவது விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களிலே என்னால் சில அபிவிருத்தி பணிக்கள் இந்த மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இன்னும் சில அபிவிருத்தி பணிகள் நிருவாகத்தில் இருந்த குழப்பகரமான செயற்பாடுகளால் மிகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் செய்தும் முடிக்கப்பட்டது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக எமது நாட்டிலே தற்போது அபிவிருத்திப் பணிகள் என்பது பூச்சியமாகவே உள்ளது. கடந்த அரசாங்ககளில் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என பல்வேறுப்பட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவையனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பிற்கு வருகை தந்த அமைச்சரொருவர் மட்டக்களப்பில் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக பேசியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏற்படுகின்ற வெள்ளத்தினை தடுப்பதற்கான பல திட்ட வரைபுகள் கடந்த ஆண்டுகளில் பல வழங்கியிருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கான எந்வொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ததாக இல்லை. இது இவ்வாறு இருக்க அமைச்சர் ஒருவர் ம்டக்களப்பின் எல்லையில் உள்ள மாதுரு ஓயாவா? மல்வத்து ஓயாவா என்று கூட தெரியாமல் மட்டக்கள்பபினை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே எங்கெங்கு என்னென் அபிவிருத்தி செய்ய வேண்டும் என நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அவற்றுக்கு தேவையான நிதியினை அரசாங்கம் வழங்காமல் மக்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.

அநுர குமார திசாநாயக்கவின் அரசினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நாம் கூறவில்லை. மக்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறுவதை நிறுத்தி வைத்து விட்டு மக்களுக்கு தேவையான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்