மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (11) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கணக்காளர் பி.சுகீஸ்வரன், வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன், உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம். புதிய கல்வி சீரமைப்பினை ஆரம்பித்திருக்கின்றோம்.தரம் ஒன்றிலும் தரம் ஆறிலும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம். இருந்தபோதிலும் தரம் ஆறின் பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த காலத்தில் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே அதிகளவான நிதிகளை அக்காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் ஒதுக்கிவந்தார்கள். ஆனால் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாகாணசபைகள் ஊடாக 350 மில்லியன் ரூபாவும் மத்திய அரசாங்கம் ஊடாக 179 மில்லியன் ரூபாக்களும் மொத்தமாக 529 மில்லியன் ரூபாவினை நாங்கள் கல்விக்காக ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

கட்டிடங்களை திருத்துவதற்காகவும் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்வதற்காகவும் இந்த நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.இன்னும் பல வேலைத்திட்டங்களை கல்வி அபிவிருத்திக்காக செயற்படுத்தவுள்ளோம்.

கல்வி என்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு சுமையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இம்முறையிலே மாற்றத்தினை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றோம்.

பிரதமர் ஒரு பெண்ணாக இருந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றார். இந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் பெண்களுக்கு முக்கியம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தியில் பெண்கள் ஒரு பங்காளராக உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பெண்களுக்கான சந்தர்ப்பத்தினையும் வாய்ப்புகளையும் வழங்கி பெண்களை வலுவூட்டுவதற்கான பல விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

பெண்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாகவும் கல்விக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது என தெரிவித்தார்.

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்