பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்வு

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது என ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, டிக்கோயா பட்டல்கல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய பழனி லூகாஸ் என்பவர், சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதி, நேற்று (02) வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்தின் தரத்தைப் பரிசோதனை செய்த நுவரெலியா மாவட்ட பிரதம மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார, குறித்த பேருந்தில் எந்தவிதமான இயந்திரக் கோளாறுகளும் இல்லை என்றும், சாரதியின் கவனக்குறைவான மந்தகதியற்ற வாகனம் செலுத்துதலே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்