யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள்இதுஷ்பிரயோகங்கள் மற்றும் திட்டமிட்டுப் பரப்பப்படும் போதைப்பொருள் கலாசாரத்திற்கு எதிராக நாளை (மார்ச் 31) நல்லூர் கந்தசுவாமி கோவில் வீதி சங்கிலியன் பூங்காவிற்கு அருகில்.கண்டனப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச தரத்திலான நீதியைப் கொடுக்கவேண்டும்.
சமூகத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் விநியோகத்தை முற்றுமுழுதாகத் தடுத்தல்.
பெண்களினதும் சிறுவர்களினதும் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல்.ஆகிய நோக்கங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.