கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் குறித்து எந்தவிதத் தகவல்களும் கிடைக்காத நிலையில், அவனது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டுக்காகப் புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன சிறுவனின் விபரங்கள்:
பெயர்: பஸ்மின் நவீத்
வயது: 13
முகவரி: பொன் நகர், கிளிநொச்சி.
இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பொதுமக்களின் உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.