ஆங்கிலத்தில் மட்டும் இரங்கல் செய்தி வெளியிட்ட ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரி பணி ஓய்வு!

ஏர் கனடா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) மைக்கேல் ரூசோ, சுமார் இரண்டு தசாப்த கால பணிக்குப் பிறகு இந்த இலையுதிர்காலத்தில் பணி ஓய்வு பெறவுள்ளதாக அந்த நிறுவனம் திங்களன்று அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நடந்த 8646 விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் இரங்கல் செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. ” ரூசோ தனது இயற்கையான பணி ஓய்வு வயதை எட்டியுள்ளார். இது CEO அடுத்தடுத்த […]

கனடாவில் புதிய குடிவரவு சீர்திருத்தச் சட்டம்; அகதிகள் உரிமைகள் பறிக்கப்படுவதாக அச்சம்!

னடாவில் குடிவரவு அதிகாரங்களை மறுசீரமைக்கும் ஒரு முக்கிய மசோதா இப்போது சட்டமாகியுள்ளது. குடிவரவு எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், குறிப்பிட்ட குழுக்களின் விசாக்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் அதிகாரம் மற்றும் புகலிடம் கோருபவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் ஆகியவற்றை இது ஒட்டாவாவிற்கு வழங்குகிறது. வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International), குடிவரவு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுத்துறை தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் கூட்டணியிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் கைகளில் அதிகப்படியான அதிகாரத்தைக் […]

மன்னாரில் மதுபானத்திற்குள் இறந்த நிலையில் பல்லி!

மன்னாரில் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்ட போத்தல் கள்ளில் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னாரில் உள்ள போத்தல் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு (29) கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடல் முழுவதுமாக கிடந்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான பனம் கள்ளு விற்பனை […]

மத்திய கிழக்கில் கடந்த 31 நாட்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய மத்திய கிழக்கு மோதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அடிப்படையில் சிஎன்என் (CNN) தொகுத்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. யுத்தம் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து அந்தந்த நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு (இந்த எண்களை சிஎன்என் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை): ஈரான்: பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 1,900 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் […]

ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு – நாமல் ராஜபக்சவின் கருத்து

இந்தியா டுடே (India Today) மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காலி கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்தியப் பெருங்கடல் ஒரு பாதுகாப்பான வலயமாக அறியப்பட்ட நிலையில், இச்சம்பவம் இப்பிராந்தியத்தின் அடையாளத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது சட்டவிரோதமானது மற்றும் தார்மீக விழுமியங்களுக்கு எதிரானது என அவர் வாதாடினார். இந்தியாவின் பங்கு: பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து […]

உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் எரிசக்தி வளங்களை “முற்றாக” அழிப்பேன் – டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டத்தவறினால் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறந்துவிடாவிட்டால், அந்நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளை “குண்டுவீசி முற்றாக அழிப்பதன்” மூலம் இப்பிராந்தியத்தில் தனது இராணுவ ஈடுபாட்டை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று காலை தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப்: “ஈரானில் எமது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, புதிய மற்றும் மிகவும் […]

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் மரணம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சென்ற பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை பொல்கொட ஆற்றில் நேற்று மாலை நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது குடும்பத்தினருடன் தம்பே பகுதியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் மரணம் | Britain Teacher Dies In Sri Lanka சில […]

கோட்டாபய இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

‘அரகலய’ போராட்டக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் தான் காயமடைந்ததாகக் கூறி தனபாலசிங்கம் சுதாகரன் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார். தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, […]

அயல் வீட்டாருடன் முறுகல்; இளைஞன் படுகொலை

பாணந்துறையில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிங்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளான 37 வயதான நபர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்ட நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை […]

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஒன்றில் 5 […]