நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த காரைச் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியபோது, அதனை நிறுத்தாது முன்னோக்கிச் செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் […]
ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகள் நிராகரிப்பு

அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை நிராகரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பணிமனைகளுக்கு விநியோகிப்பதற்காக ‘சதொச’ நிறுவனம் ஊடாக 14,000 கரம்போர்ட்கள் மற்றும் 11,000 தாயக்கட்டைகளை இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலம் 39 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறையற்ற வகையில் […]
உழவு இயந்திரத்தால் பொலிசாரை மோதி கொலை; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர், பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்லும் […]
நாட்டில் நிலவும் பாரிய குற்றச் செயல்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் திங்கட்கிழமை (30) பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP சட்டத்தரணி எப். யூ. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை (Red Notice) இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் […]
பொது மக்கள் அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்

வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் நேற்று (29.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள், அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய “எல்-நினோ” வானிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட பதவி விலகல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். இந்த பதவி விலகல் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளரினால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. திமல் அரந்தர பதில் தலைவராகச் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலிருந்து அதன் பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மூலதன மானிய நிகழ்ச்சித் திட்டம் வடக்கில் நலிந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களை சீரமைக்கும் – வட மாகாண ஆளுநர்

வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் […]
ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை ஸ்திரத்தன்மையைப் பேணுகின்றது!

இலங்கையின் ஆடை ஏற்றுமதியானது 2026 பெப்ரவரி மாதத்தில் பரந்த அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முக்கிய உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இம்மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி 11.46% இனால் குறைந்து 361.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. இதில் முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுகள் பின்வருமாறு: ஐரோப்பிய ஒன்றியம் (EU): -19.48% அமெரிக்கா (USA): – 3.53% பிரித்தானியா (UK): -5.67% ஏனைய சந்தைகள்: […]
அடிப்படை வசதிகளற்றே இளவாலை வைத்தியசாலை இயங்குகிறது – மனித உரிமை ஆணைக்குழு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அண்மையில் மாணவர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் வெளிவந்த முக்கிய விடயங்கள்: தாதியர் பற்றாக்குறை: இளவாலை வைத்தியசாலைக்கு இதுவரை ஒரு தாதிய உத்தியோகத்தர் கூட நியமிக்கப்படவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அம்புலன்ஸ் விவகாரம்: நிரந்தர சாரதி இல்லாத காரணத்தால் இந்த வைத்தியசாலையின் அம்புலன்ஸ் […]
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய நால்வர் கைது
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், மேலும் ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29) பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மீட்டியாகொடை மாவத்தகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடொன்றினைச் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் […]