யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அண்மையில் மாணவர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் வெளிவந்த முக்கிய விடயங்கள்:
தாதியர் பற்றாக்குறை: இளவாலை வைத்தியசாலைக்கு இதுவரை ஒரு தாதிய உத்தியோகத்தர் கூட நியமிக்கப்படவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அம்புலன்ஸ் விவகாரம்: நிரந்தர சாரதி இல்லாத காரணத்தால் இந்த வைத்தியசாலையின் அம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது. தற்போது மார்ச் 28 முதல் மீண்டும் ஒரு அம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணிப்பாளரின் பதில்: இனிவரும் காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தாதியர் ஆளணியை உருவாக்குவதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.