புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரிடம் நேரில் முறையிட்டனர்.

பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கையில்: சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததுடன், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன், வாழ்வாதாரமாக இருந்த விவசாயச் செய்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளைத் துப்பரவு செய்வதற்காக அரசாங்கத்தினால் 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. எனினும், மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களில் கால்நடை இழப்புகளுக்காக 10 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தம்பனைக்குளம் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கால்நடைகளின் அழிவு குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது, “உரிய ஆவணங்கள் இல்லை” என்ற காரணத்தைக் கூறி இழப்பீடுகளை வழங்க மறுப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இவ்விடயத்தில் தலையிட்டால் மட்டுமே தமக்கு நீதி கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த கால்நடைகள் மற்றும் விவசாயப் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.