கடந்த 46ஆண்டு களாகத் தலைநகரிலே கலை, இலக்கிய மேம்பாட்டுக்காகச் செயல் பட்டு வரும் புதிய அலை கலை வட்டம், அதன் கட்டமைப்பாக பிரதமநிர்வாகம், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் சமூக நல அமைப்பான நல உதயம் என்ற அணிகளை உள்ளடக்கிச் செயற்பட்டு வருகிறது.
வருடாந்தம் பிரதம நிர்வாகம் உட்பட மற்றும் சகல அணிகளுக்கும் நிர்வாகிகள் தெரிவை நடத்துவதோடு இந்தப் பிரிவுகளுக்கான புதிய அங்கத்தவர்கள் இணைப்பையும் நடத்தி வருகின்றது.
எனவே இதில் இணைந்து செயல்பட விரும்பும் புதியவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இணைந்து கொள்ள விரும்புவோர் வேறொந்த கலை,இலக்கிய அமைப்புகளில் அங்கத்துவம் பெறாதவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானது.
அவ்வாறான ஆர்வமுள்ளவர்கள் பிரதம நிர்வாகம்,இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் நல உதயம் அமைப்புகளில் தாம் விரும்பும் பிரிவுகளில் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனர் ராதாமேத்தா தெரிவிக்கிறார்.
இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற முடியும் எனவும் அறியத்தரப்படுகிறது.