“புதிய அரசு அமையும் வரை காவிரி ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகாத சூழலில், நாளை மறுநாள் (ஏப்ரல் 29) டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்ரல் 27) தனது அதிகாரப்பூர்வ் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்! தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் தில்லியில் நாளை மறுநாள் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவது குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019-ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டது. எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பிவிட்டது. இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு திறம்பட நடத்தாததால்,மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ளக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு சிக்கல் எழுப்பும் வாய்ப்புள்ளது. எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக முடிவெடுக்கப்படுவதைத் தவிர்க்க நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்; ஒருவேளை கூட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாதது என்றால், அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#AnbumaniRamadoss #PMK #CauveryManagementAuthority #MekedatuDam #CauveryWaterDispute #TNElection2026 #KarnatakaPolitics #SupremeCourtVerdict #SaveCauvery #TamilNaduFarmers #DeltaDistricts #BreakingNews #TamilPolitics #WaterJustice #InterStateRiverWater #April29Meeting #AnbumaniReport #CauveryIssue2026

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்

6

“கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும்!” – முதலமைச்சர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு உறுதி!

October 14, 2026

விஜயவாடா: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறைப் பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவர் ஆந்திர

5

“இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆலோசிக்க வேண்டும்!” – சி.வி.சண்முகம்!

October 14, 2026

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட

4

“மற்ற கட்சிக்காரர்களை அழைத்து கட்சியில் இணைப்பது கேவலம்!” – தவெக மீது இபிஎஸ் தாக்கு!

October 14, 2026

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தில் போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தால், மற்ற கட்சிக்காரர்களைக் கூவிக்கூவி அழைத்துக் கட்சியில் இணைப்பது மிகவும்

3

“ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்!” – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

October 14, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,

2

“எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்?” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

October 14, 2026

சென்னை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி திடீரெனக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும்

1

“சென்னையில் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம்!” – முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்!

October 14, 2026

சென்னை: சென்னை மாநகர மக்களுக்குக் கோடைக்காலத்திலும் எந்தவிதத் தடையுமின்றிச் சீரான குடிநீர் வழங்கும் வகையில், சுமார் 3,108 கோடி ரூபாய்

Gnanasara-Thera

சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் – ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை

October 14, 2026

சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிவதற்கு அனுமதிக்கும் புதிய சிறைச்சாலை விதிமுறையை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார முன்மொழிந்துள்ளார். ஞானசார

hiv

இலங்கையில் ஆண்களுக்கு எச்.ஐ.வித் தொற்று அதிகரிப்பு

October 14, 2026

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

china

கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

October 14, 2026

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம்

Saji

அனோஜனின் மரண தண்டனை இரத்துக்கு நன்றி தெரிவித்தார் சஜித்

October 14, 2026

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு