நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த அரசாங்கத்துக்கு நிதியளிக்க கூடாது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்த நிகழ்வு களுத்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை. மக்களால் பலவந்தமான முறையில் அரசியலுக்கு தள்ளப்பட்டேன்.கடந்த ஒன்றரை வருடகாலமாக பல சவால்களுடன் அரசியலில் ஈடுபடுகிறேன்.

எனது தந்தை பயங்கரவாதி என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனது தந்தை பொலிஸில் மூன்றாவது பதவி நிலையில் இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.சிங்கள மக்கள் தமது தலைவராக மஹிந்த ராஜபக்ஷவையே பார்க்கிறார்கள்.இந்த நாட்டின் ஜனாதிபதியாக நானும் அவரை பார்க்கிறேன்.

பல வாக்குறுதிகளை குறிப்பிட்டுக் கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, ஆனால் இன்றுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த அரசாங்கத்துக்கு நிதியளித்தார்கள். ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இனியும் ஏமாற போவதில்லை.

போலியான வாக்குறுதிகளை வழங்கியே ஜனாதிபதி நாட்டு மக்களை ஏமாற்றினார். நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். முதலில் தனது மனைவி யார் என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட வேண்டும்.

தனது இனத்தை ஆதரிக்கும் ஒருவர் தான் பிறிதொரு இனத்தையும் ஆதரிப்பார். ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தனது இனத்தின் மீது பற்றில்லாதவர்கள். இவர்கள் எவ்வாறு பிறிதொரு இனத்தை ஆதரிப்பார்கள்.

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்றார்.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்