புதிய அரசியலமைப்பு; இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைக்கத் தீர்மானம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல் மற்றும் அதனை மக்கள் மயப்படுத்தல் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு வரைவு தயாரித்தல் குழு, பிரசாரக் குழு மற்றும் மக்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கான குழு ஆகிய 3 குழுக்களை நியமிப்பதற்கு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.

தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமென அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கமைய முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராகக்கொண்ட 33 பேரடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.

அக்குழு ஞாயிற்றுக்கிழமை (28) பி.ப 7.00 – 9.00 மணி வரை நிகழ்நிலை முறைமை ஊடாகக் கூடியது.

இக்கூட்டத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவினைத் தயாரிப்பதற்கு வரைவு தயாரித்தல் குழுவையும், இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரசாரக் குழுவையும், இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்டறிந்து, அவர்களது அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கான குழுவையும் நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி கு.குருபரன் கேசரியிடம் தெரிவித்தார்.

அதேவேளை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 33 பேரும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் இந்த 3 குழுக்களுக்கும் நியமிக்கப்படுவார்கள் என்றும், அச்செயன்முறையை எதிர்வரும் ஒருவார காலத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் பின்னர் இந்தக் குழுக்கள் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் அவற்றின் பணிகளை முன்னெடுத்துச்செல்லும் என்றார்.

அதேபோன்று மேற்குறிப்பிட்ட வரைவைத் தயாரிக்கும்போது அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியப் பேரவையினால் தயாரிக்கப்பட்ட வரைவு, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினரிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் கையளிக்கப்பட்ட வரைவு மற்றும் வடக்கு மாகாணசபை இயங்குநிலையில் இருந்தபோது தயாரிக்கப்பட்ட வரைவு ஆகிய மூன்றிலும் உள்ள ஏற்றுக்கொள்ளத்தக்க விடயங்களை உள்வாங்கி, புதிய வரைவைத் தயாரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் குருபரன் தெரிவித்தார்.

மேலும் அரசியல் தீர்வு குறித்து இவ்வரைவில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படைக்கோட்பாடுகள் குறித்து ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்படவேண்டியது அவசியம் என்ற விடயமும் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு