சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
“விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான். தற்போது அந்தத் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருந்தாலும், அவர் உண்மையில் நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்; அதில் சந்தேகமே வேண்டாம். திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் உலக வரைபடத்தை விட நீளமானவை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத இந்தத் தீய ஆட்சியை மக்கள் தூக்கி வீச வேண்டும். ஒரு ஓட்டு கூட திமுகவுக்குப் போட வேண்டாம் எனத் தாய்மார்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். தபால் வாக்குகளில் 90 சதவீதம் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சியை அமைப்பது உறுதி,” எனப் பேசினார்.
#AnbumaniRamadoss #EPS #ADMKAlliance #PMK #SalemCampaign #TNElection2026 #PremalathaVijayakanth #DMDK #AntiDMK #VoteForADMK #EdappadiPalaniswami #TamilPolitics #Election2026 #SalemPolitics #AnbumaniSpeech #TamilNaduPolls #Victory2026 #WomenSafety #SaveTamilNadu #ViralPolitics