பிரான்ஸ் முழுவதும் பதற்றம் : 1,000க்கும் அதிகமானோர் கைது

பிரான்ஸ் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராக பிரான்ஸில் சனிக்கிழமை தீவிர போராட்டங்கள் வெடித்தன.

சுமார் 550,000 மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், “வன்முறையின் தீவிர வளர்ச்சி” காரணமாக குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரில், இரவிலும் கலகத்தடுப்பு பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றன. கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்த்தாரைப் பிரயோகத்தையும் பயன்படுத்தினர்.

தலைநகர் பாரிஸ் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. Limoges (லிமோஜஸ்) பகுதியில் நகர சபை மண்டபத்தில் ஏற்பட்ட பெருந்தீ காரணமாக அதன் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

பல நகரங்களில் சூறையாடல்கள் வெடித்ததுடன், நகர சபை அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து பரவலான சேதங்கள் விளைவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் பிரதமர் Sébastien Lecornu (செபாஸ்டியன் லெகோர்னு), இந்த வன்முறைகளில் 150 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரிஸில், மதிய வேளையில் பிரதான பேரணி அமைதியான முறையில் நடைபெற்றது. பிபிசியிடம் பேசிய இளைஞர்கள் குழுவினர், தாங்கள் “அமைதி விரும்பிகள்” என்றும், “மாற்றத்தை ஏற்படுத்தவே முயல்கிறோம், ஆனால் எதுவுமே நகரவில்லை” என்றும் கூறினர்.

இருப்பினும், நாள் நகர நகர, சில குழுக்கள் தெருக்களில் தீ வைத்தும், நகரின் மையப்பகுதியான Place de la République (பிளேஸ் டி லா ரெபப்ளிக்) போன்ற முக்கிய இடங்களில் வாகனங்களைக் கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டன.

கடைகள் சூறையாடப்பட்டன, குறைந்தது ஒரு உணவகம் தீயில் எரிந்து சாம்பலானது. சில குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்ததையும் பிபிசி கவனித்தது.

பாரிஸ் மையப்பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் ஒரு கூட்டத்தை நோக்கிச் சென்று, பலரை லத்திகளால் தாக்கிய காட்சிகளும் காணப்பட்டன.

Lyon நகரில், அந்நகரத்தின் சுற்றுலா அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது ஒரு “பேரிடர்” என்று மேயர் Grégory Doucet ( கிரிகோரி டூசெட்) தெரிவித்தார். “இது எங்கள் இதயத்தை உடைக்கிறது, ஏனெனில் இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க, புகழ்பெற்ற கட்டிடம்” என்று அவர் BFMTV யிடம் கூறினார்.

அக்னிப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாகத் தீயை அணைப்பதைத் “பகைமை கொண்ட நபர்கள்” தடுத்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.

லிமோஜஸ் நகர சபை மண்டபத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடினர். இந்தத் தீ காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக உள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Saint-Étienne(சப்ட்-எட்டியென்) நகரில், கையெறி குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டதாக அந்நகர மேயர் Régis Juanico (ரெஜிஸ் ஜுவானிகோ) சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். “இத்தகைய சோகம் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகரின் சில பகுதிகள்,Marseille (மார்சாய்), Rennes (ரென்ஸ்), Toulouse(துலூஸ்) மற்றும் Angers (அஞ்சேர்ஸ்) உள்ளிட்ட இடங்களில் முகமூடி அணிந்த நபர்களால் “திட்டமிடப்பட்ட வன்முறைச் செயல்கள்” மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Grenoble (கிரெனோபிள்),Avignon (அவிக்னான்), Pau (போ),Montpellier (மாண்ட்பெலியர் ) மற்றும் வேலன்ஸ் (Valence) உள்ளிட்ட பிரான்ஸ் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

பாரிஸில் ஆடை மற்றும் உணவுப் பொருட்கள் கடைகள் சூறையாடப்பட்டன. லில் நகரில் உள்ள ஆப்பிள் (விற்பனையகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டன.

ஒரு சுற்றுலா ரயிலை முகமூடி அணிந்த நபர்கள் குறுகிய தெரு வழியாக பொலிஸாரை நோக்கி ஓட்டிச் சென்ற காட்சி பிபிசி சரிபார்ப்பு அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் படிக்கும் பாடசாலைகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் சீரழிந்த வசதிகளைக் கண்டித்து, கடந்த சில வாரங்களாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமையன்று, தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர போராட்டக் குழுக்களின் பங்கேற்பால் மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.

இந்தக் குழுக்களில் “மஞ்சள் அங்கி” இயக்கமும் அடங்கும். இவர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் ஓராண்டுக்கும் மேலாக வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, பிரான்ஸ் வரலாற்றில் மிக நீண்ட காலம் நீடித்த போராட்ட இயக்கங்களில் ஒன்றாக மாறினர்.

பிரான்ஸுக்கு போராட்டங்களும் அமைதியின்மையும் புதிய விஷயமல்ல என்றாலும், இம்முறை நாடு ஒரு ஆழமான அரசியல் நிச்சயமற்ற காலக்கட்டத்தை நோக்கிச் செல்லும்போது இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.

பிரெஞ்சு அதிபர் Emmanuel Macron (இம்மானுவேல் மேக்ரான்) அடுத்த ஆண்டு பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாத அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரித் தலைவரான மரீன் லெ பென் (Marine Le Pen) மற்றும் தீவிர இடதுசாரித் தலைவரான Jean-Luc Mélenchon ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் பங்கேற்ற மெலன்சோன், பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிடுவதாகக் குற்றம் சாட்டினார். அதே சமயம் சூறையாடல் மற்றும் தீ வைப்புச் சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்தார்.
போராட்டக்காரர்களின் “நியாயமான கோரிக்கைகள்” தீவிர இடதுசாரிகளால் “பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளன” என்று மரீன் லெ பென் குற்றம் சாட்டினார்.

அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில்: “அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தாக்கி, நகர சபைகளைச் சூறையாடியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

867793981_1826855906111595_6657237902329207622_n

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

October 28, 2026

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி மீனவர்களை தேடிச் செல்லவுள்ள அணியினருக்கான பாதுகாப்பு சட்டைகளை (safety jacket)

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கை: நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு CIDக்கு உத்தரவு

October 28, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக குற்றப்புலனாய்வு

namal 22222222222

பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் – நீதிமன்றத்தில் அலி சப்ரி

October 28, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர். அலிசப்ரி நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை

gajendran

நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன்

October 28, 2026

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டுள்ள கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடு;ம்பத்தினருடன் இணைக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற

rajeevkanth

இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!–ரஜீவ்காந்

October 28, 2026

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கிருஸ்ணகுமாருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

batti land

மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்

October 28, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் மீதான துப்பாக்கிச் சூடுகள், அச்சுறுத்தல்கள் மற்றும்

image_7bb7d5bb0c

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது!

October 28, 2026

இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் 7 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கந்தசாமி

arr

மானிப்பாயில் போதைக் குளிசைகளுடன் இருவர் கைது

October 28, 2026

யாழ்ப்பாணம், மானிப்பாய் சென். பீட்டர்ஸ் வீதிக்கு அருகிலுள்ள பகுதியில், 500 போதை குளிசைகளுடன் 24 மற்றும் 26 வயதுடைய இருவர்

lal

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது !

October 28, 2026

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், அதனை ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே தாம்

2

இலங்கையின் ​சமூக ஊடகங்களில் குழந்தைகள் சுரண்டப்படுவதைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்!

October 28, 2026

​சமூக ஊடகங்கள் மூலம் வணிக ரீதியான லாபம் மற்றும் இணையப் பிரபலத்தைப் பெறுவதற்காகக் குழந்தைகள் பயன்படுத்தப்படும் Kid fluencing என்ற

ls

லண்டன் புறப்பட்ட விமானத்தை தடுத்த பறவை

October 28, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, புதன்கிழமை(28) ஆம் திகதி நண்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் லண்டன் நகரம் நோக்கிப் புறப்பட்ட,

M-K-Stalin

“SIR-ஐ ரத்து செய்து வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்!

October 28, 2026

சென்னை: நாடு முழுவதும் எஸ்ஐஆர் (SIR – Special Intensive Revision) நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மீண்டும் பழைய