தனது அரசியல் எதிர்காலம் குறித்துக் குறிப்பிட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் தற்போது பாராளுமன்றத்தில் தனது கடைசி நாட்களைக் கழிப்பதாக இன்று தெரிவித்துள்ளார்.
“நான் நீண்ட காலம் பாராளுமன்றத்தில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் இருப்பேன்,” என்று அவர் சபையில் கூறினார்.
என்னை பாராளுமன்றத்தில் இருந்து நீக்குமாறு நீதித்துறையைக் கோரி ஓஷால ஹேரத் தாக்கல் செய்த வழக்கு, சிங்கள மக்கள் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.