பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.

“பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் ”

என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நீதியான விசாரணைகளுக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 7 நாட்கள் முடிவடைந்த பிறகும் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாட்டில் ஏதேனும் சிறு அசம்பாவிதம் இடம்பெற்றால் அது குறித்து 24 மணித்தியாலத்துக்குள் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.

7 நாட்கள் கடந்தும் அறிக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் நான் முறைப்பாடளிக்குமாறு குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தினேன். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் அதனால் முறைப்பாடளிக்கிறோம் என கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு தற்போதைய விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு 80 குற்றவாளிகளை அடையாளப்படுத்தி 41 வழக்குகளை தாக்கல் செய்தோம்.

இவ்வாறான பின்னணியில் தான் அப்போதைய சட்டமா அதிபர் சேவையில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்னர் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று ‘ குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி உள்ளார்’ என்று குறிப்பிட்டார்.இதன் பின்னர் பேராயர் கர்தினால் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போதைய சட்டமா அதிபர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அதற்கு அப்போதைய சட்டமா அதிபர் இணக்கம் தெரிவிக்கவில்லை. வாக்குமூலம் பெறுவதை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுக்கொண்டார்.

இந்த விடயம் குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் வினவிய போது ‘சட்டமா அதிபர் தனது சேவை காலத்தை மேலும் ஒருவருடத்துக்கு நீட்டிக்குமாறு குறிப்பிட்டார்.அதற்கு நான் இணக்கம் தெரிவிக்கவில்லை. அதன் பின்னரே இவ்வாறு குறிப்பிடுகிறார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பிடிப்பதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் இன்றுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலத்தை நாங்கள் சமர்ப்பித்தோம்.ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.

யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது.

75 ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த ஒன்றரை வருட கால ஆட்சியில் என்ன செய்தார்கள்.கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டுக்கு ஏதாவதொன்றை செய்துள்ளார்கள். கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்ன செய்வார் என்று நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்