பட்டலந்த வதைமுகாமுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகளை நடத்தவேண்டும் என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
சட்டமாஅதிபர் இது தொடர்பான தனது அவதானிப்புகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மாத்திரம் அடிப்படையாகவைத்து சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதே சட்டமா அதிபரின் அபிப்பிராயம்.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க 2025 மார்ச் 14ம் திகதி பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
1994 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995 செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி பட்டலந்த ஆணைக்குழுவை நியமித்தார்
புpயகமவில் உள்ள அரசஉர உற்பத்திக்கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பட்டலந்த கட்டிடத்திற்குள் 1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் பல இளைஞர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே சந்திரிகா இந்த ஆணைக்குழுவை நியமித்தார்.