சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிகமாக விளக்கமளித்த அவர், பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அந்த் தண்டனைக் காலத்தைச் சிறைச்சாலையில் கழிக்கும் போது அவர் தமது காவி ஆடையை அணிய முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும், விதிக்கப்பட்டது கடுழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவரது சிறைத்தண்டனைக் காலம் 3 ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால், அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளுக்கும் காவி ஆடை அணிய அனுமதி வழங்கப்படலாம்.

ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு தராதரத்தைக் கொண்ட நபராக இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலையினால் வழங்கப்படும் ஆடையை அணிந்தே ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டின் சிறைச்சாலைகளில் 63 க்கும் மேற்பட்ட தேரர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் சிறைச்சாலையினுள் சிறை ஆடையையே அணிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

a

சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!

October 7, 2026

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில்

an

சர்வதேச தரநிலைகள் 3 வாரங்களில் முழுமையான தயார்நிலை!

October 7, 2026

நிதித் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை

kachc

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள்; மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இல்லை!

October 7, 2026

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும்,

8

“காங்கிரஸ் கூட சேர்ந்தவங்க யாரும் உருப்படவே முடியாது!” – தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துத் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

October 6, 2026

“‘சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர்

7

“வைரலாகும் வீடியோ ஜோடிக்கப்பட்டது!” – தேர்தல் செலவு சர்ச்சை குறித்துத் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அதிரடி விளக்கம்!

October 6, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்கள்

6

“செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம்!” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் அறவழியில்

chennai-mtc-bus-viral-video

“பயணிகளை ஆபாசமாகத் திட்டி அட்டகாசம்!” – அரசுப் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளம் பெண்ணால் பெரும் பரபரப்பு!

October 6, 2026

தமிழ்நாடு: அரசுப் பேருந்து ஒன்றில் மதுபோதையில் ஏறிய இளம் பெண் ஒருவர் சக பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அட்டகாசம்

4

“தாராபுரம் தவெக வேட்பாளர் மீது திமுக அதிரடி புகார்!” – ரூ.31 கோடி செலவிட்டதாக வைரலாகும் வீடியோவால் தேர்தல் களத்தில் பரபரப்பு!

October 6, 2026

சென்னை: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்களை

3

“இதென்ன தாய்மாமன் தடியடி திட்டமா?” – செவிலியர்கள் கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டமைக்குத்

2

“100 பவுன் நகையைப் பறிகொடுத்த யூடியூபர் மதுமிதா மீது நகைத்திருட்டு வழக்கு!” – 89 வயது முதியவர் அளித்த புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை!

October 6, 2026

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 89 வயது முதியவர் ஒருவரிடம் 5 பவுன் தங்க

1

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!” – கடந்த தேர்தலை விடக் குறைவு; அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை!

October 6, 2026

“‘சென்னை: தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

839012679_1123462123527488_138327752421248103_n

பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

October 6, 2026

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக