படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மரணத்துக்கு ஜனாதிபதி அநுர நடவடிக்கையெடுப்பார் – சகோதரர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

லசந்தவுக்காக நாம் அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

லசந்த படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளாகியும், இதுவரை மக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது எமக்கும் தெரியும், விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் தெரியும், படுகொலை செய்தவர்களுக்கும் தெரியும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தான் மக்கள் மத்தியில் குரோதமும், சந்தேகமும், அமைதியின்மையும் நிலவுகிறது.

ஒரு வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் போது சாட்சிகள் அவசியம் என்பது எனது கருத்து. ஆனால், இங்கே சாட்சிகளை முன்வைப்பதற்கு முன்னரே, இதில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் நினைத்தால் இதைவிட நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் லசந்தவின் கொலை தொடர்பில் இதுவரை அது நடக்கவில்லை.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கான சாட்சிகள் இருந்தும் ஏன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை? ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சாட்சிகளை மாற்றியமைத்தது தொடர்பில் தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? லசந்த கொலை செய்யப்பட்ட போது அவரது நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஏன் வழக்குத் தொடரப்படவில்லை? இவ்வாறான வெளிப்படையான விடயங்களுக்கு முதலில் வழக்குத் தொடர்ந்தாலே, பிரதான கொலை வழக்கிற்கான சாட்சிகள் தானாகவே வலுப்பெறும்.

எமது நாட்டில் அரசியல்வாதிகள் இரண்டு விடயங்களை மட்டுமே செய்கிறார்கள். ஒன்று வாக்குகளைப் பெறுவது, மற்றொன்று தாம் எடுக்கும் தீர்மானங்களால் வாக்குகள் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது. லசந்த விக்ரமதுங்க, கீத் நோயர் போன்றவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரகீத் எக்னெலிகொடவின் மறைவு என்பன இராணுவத்தின் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனத்தில் ஒரு சிறு குழு தவறு செய்யும்போது அந்த நிறுவனத்துக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. அத்தகையோரை நீக்கிவிட்டு நிறுவனத்தைக் காப்பாற்றுவதே முறை. ஆனால் இலங்கையில் அரசியல்வாதிகள் அவர்களை ‘ரணவிருவோ’ (மாவீரர்கள்) என்று கூறி காப்பாற்றுகிறார்கள். காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்களாக முடியாது. இதனை ஒரு தேசமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.

லசந்த சர்வதேச ரீதியாக ஒரு வீரராகப் போற்றப்படுகிறார். ஆனால் சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டார், பத்திரிகை நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. இதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நான் சந்தித்தபோது, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் உறுதியளித்தார். அந்த நம்பிக்கையிலேயே நான் இன்னும் காத்திருக்கிறேன் என்றார்.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ