படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், கண்டி, பூஜாரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் ஆவர்.

கண்டிப் பகுதியிலிருந்து 33 பேரைக் கொண்ட குழுவினர் நேற்று (28) லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.

அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பின்னர், அந்த சுற்றுலாத் தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை பாதுகாப்பற்ற முறையில் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்ட மிதவைப்படகு மூலம், லொக்கல்லா ஓயா குளத்தின் நடுவிலுள்ள சிறிய தீவொன்றிற்கு நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.

அவர்கள் அந்தத் தீவில் நீராடிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அந்த மிதவைப்படகு உடைந்து கவிழ்ந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து நடந்த தருணத்தில் இந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் இருவர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருக்காததால் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததுடன், பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் இன்று (29) காலை அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பதில் நீதவான் எஸ். கோவின்ன இன்று (29) மதியம் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சடலங்கள் இரண்டையும் மஹியங்கனை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

f

சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிந்த இலங்கை அணி!

June 29, 2026

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்தித்த பாரிய தோல்வியைத் தொடர்ந்து, ஐ.சி.சி. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்

26-6a426e64d5a21

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் இடிபாடுகளுக்குள் சடலங்களாக மீட்பு!

June 29, 2026

வெனிசுவெலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரிச்டர் 7.2 மற்றும் 7.5 அளவிலான மிகக் கொடூரமான இரட்டை பூமியதிர்ச்சிப் பேரழிவில், ஆர்ஜென்டினாவைச்

wat

படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

June 29, 2026

ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி

QI4MUFETOVFVFAPKRVUVGZTOZQ

ஒஸ்குட் அருகே இரு வாகனங்கள் மோதி விபத்து: 8 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

June 29, 2026

ஒஸ்குட் (Osgoode) பகுதிக்குத் தெற்கே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கொடூர வாகன விபத்தொன்றில் 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்

AYJZKZA3FREUDNBLINDEXQCUUU

டெசேன்ஸ் அலைப்பாய்வில் சிக்கிய பான்டூன் படகு: 7 பேரை பத்திரமாக மீட்டது ஒட்டாவா தீயணைப்புப் படை

June 29, 2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெசேன்ஸ் அலைப்பாய்வு (Deschênes Rapids) பகுதியில் பான்டூன் படகு (Pontoon boat) ஒன்று சிக்கிக்கொண்டதை அடுத்து,

DUOTPKQW3GWJFXFJ2XXRRMRACU

கடை ஊழியருடன் மோதலின் போது அடையாள அட்டையைத் தவறவிட்ட பெண்: கொள்ளைக் குற்றச்சாட்டில் குயெல்ப் காவல்துறை கைது!

June 29, 2026

நகரத்தின் வடக்கு முனையில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேக நபர் தனது

EF6M3EBTCFE5THLOOMSFHSEBHI

இன்னிஸ்ஃபில் பகுதியில் வாகனத்திற்குள் நபர் ஒருவர் சடலமாக மீட்பு; காவல்துறை விசாரணை

June 29, 2026

இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியில் உள்ள வாகனமொன்றில் நபர் ஒருவர் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த

HAmsathvani

ராபா உலக சாதனைப் புத்தகத்தில் கிளிநொச்சிச் சிறுமி!

June 29, 2026

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற

photo-collage.png (2)

நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

June 29, 2026

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது

Ranjith

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

June 29, 2026

ழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்! யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர்

6

உளறல்நிதியின் மற்றொரு நாள், மற்றுமொரு உளறல் – தவெக விமர்சனம்

June 29, 2026

‘சென்னை: தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கருத்து,

5

‘குதிரை பேரம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலம்’ – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

June 29, 2026

‘சென்னை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக தேசிய