சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிந்த இலங்கை அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்தித்த பாரிய தோல்வியைத் தொடர்ந்து, ஐ.சி.சி. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடங்கள் பின்னோக்கிச் சரிந்துள்ளது. இதன்படி, இலங்கை அணி நான்காவது இடத்தில் இருந்து ஆறாவது இடம் வரை சரிந்துள்ளதுடன், தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி தற்போது 44.44 புள்ளிகள் சதவீதத்தைக் கொண்டுள்ளது. அன்டிகுவாவின் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் […]

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் இடிபாடுகளுக்குள் சடலங்களாக மீட்பு!

வெனிசுவெலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரிச்டர் 7.2 மற்றும் 7.5 அளவிலான மிகக் கொடூரமான இரட்டை பூமியதிர்ச்சிப் பேரழிவில், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து டிஃபெண்டர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த இயற்கை அனர்த்தத்தில் நேர்ந்த இவர்களது மரணங்கள், விளையாட்டுத்துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. வெனிசுவெலாவின் இரண்டாம் நிலை கால்பந்து கழகம் மாரிடிமோ டி லா குவைரா அணியில் 38 வயதான லூகாஸ் […]

படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், கண்டி, பூஜாரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் ஆவர். கண்டிப் பகுதியிலிருந்து 33 பேரைக் கொண்ட குழுவினர் நேற்று (28) லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வருகை […]

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சீவரத்தினம் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கற்பகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் பெறாமகனும்,காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,துரைராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் காலஞ்சென்ற விருத்தாம்பாள் மற்றும் ஜெகசோதிமலர், காலஞ்சென்றவர்களன […]

ஒஸ்குட் அருகே இரு வாகனங்கள் மோதி விபத்து: 8 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

ஒஸ்குட் (Osgoode) பகுதிக்குத் தெற்கே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கொடூர வாகன விபத்தொன்றில் 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சுமார் 11:50 மணியளவில் ‘டால்மெனி வீதி மற்றும் நிக்சன் டிரைவ்’ (Dalmeny Road and Nixon Drive) சந்திப்பில், பிக்-அப் ரக ட்ரக் (Pickup truck) வாகனமும் எஸ்.யு.வி (SUV) ரக காரும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]

டெசேன்ஸ் அலைப்பாய்வில் சிக்கிய பான்டூன் படகு: 7 பேரை பத்திரமாக மீட்டது ஒட்டாவா தீயணைப்புப் படை

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெசேன்ஸ் அலைப்பாய்வு (Deschênes Rapids) பகுதியில் பான்டூன் படகு (Pontoon boat) ஒன்று சிக்கிக்கொண்டதை அடுத்து, அதிலிருந்த ஏழு பேரை ஒட்டாவா தீயணைப்புச் சேவையின் (Ottawa Fire Services) நீர் மீட்புக் குழுவினர் பத்திரமாகப் பொதுக்கரைக்குக் கொண்டு வர உதவியுள்ளனர். பொதுத் தகவல் அதிகாரி நிக் டெஃபாசியோ (Nick DeFazio) ‘சிடிவி நியூஸ் ஒட்டாவா’ (CTV News Ottawa) ஊடகத்திற்குத் தெரிவிக்கையில், அந்தப் பிரிவினர் படகை வாடகைக்கு எடுத்துப் பயணித்ததாகவும், மாலை 4 […]

கடை ஊழியருடன் மோதலின் போது அடையாள அட்டையைத் தவறவிட்ட பெண்: கொள்ளைக் குற்றச்சாட்டில் குயெல்ப் காவல்துறை கைது!

நகரத்தின் வடக்கு முனையில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேக நபர் தனது அடையாள அட்டையைத் (Identification) தவறவிட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, குயெல்ப் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொள்ளை மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் ‘வூட்லான் வீதி மற்றும் வூல்விச் வீதி’ (Woodlawn Road and Woolwich Street) சந்திப்பிற்கு அருகில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றிலிருந்து […]

இன்னிஸ்ஃபில் பகுதியில் வாகனத்திற்குள் நபர் ஒருவர் சடலமாக மீட்பு; காவல்துறை விசாரணை

இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியில் உள்ள வாகனமொன்றில் நபர் ஒருவர் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு 8 மணிக்குச் சற்றுப் பின்னர், ‘இன்னிஸ்ஃபில் பீச்’ வீதியிலுள்ள (Innisfil Beach Road) வீடு ஒன்றில் தனிநபர் காயத்துடனான மோட்டார் வாகன விபத்து (Personal injury motor vehicle collision) ஒன்று நிகழ்ந்துள்ளதாகக் கிடைத்த அழைப்பிற்குத் தாங்கள் துரிதமாகச் செயற்பட்டதாக சவுத் சிம்கோ காவல்துறை (South Simcoe Police) தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் […]

ராபா உலக சாதனைப் புத்தகத்தில் கிளிநொச்சிச் சிறுமி!

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயதுடைய சிறுமியே இந்த உலக சாதனையை நிலைநாட்டினார். குறித்த நிகழ்வு ​நேற்று (28) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி குறித்த சிறுமி உலக சாதனையை நிகழ்த்தினார். குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் நேற்று […]

நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளது. இப்போது, இன்னும் இரண்டு புதைகுழிகள் உள்ளன எனும் கருத்தை கூறுகின்றார். இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை தெரிவித்தார். […]