சென்னை
பஞ்சமி நிலத்தை வைத்து அரசியல் செய்வதையே சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் வருமா?:
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “ஆணவக் கொலைக்கான தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரின் நிலைப்பாடு. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, பல்வேறு கட்சி நிர்வாகிகள் தங்களது பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். இந்தச் சட்டம் தற்போது மிகவும் அவசியம். இது குறித்துக் கடந்த வாரம் முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளேன். அவரது பரிசீலனையில் உள்ள இந்தச் சட்டம் குறித்து விரைவில் முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்,” எனத் தெரிவித்தார்.
முரசொலி நில விவகாரம் – பஞ்சமி நில அரசியல்:
பஞ்சமி நிலங்கள் குறித்துப் பேசிய அவர், “தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்கக் கடந்த காலத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை வைத்து வெறும் அரசியல் மட்டுமே செய்தார்கள். கடந்த திமுக ஆட்சியில் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என பாஜக குற்றம் சாட்டியது; அதன் அடிப்படையில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கு திடீரெனக் கைவிடப்பட்டது. பஞ்சமி நிலத்தை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். இது குறித்தும் முதலமைச்சரிடம் வலுவாக முன்வைத்துள்ளேன்,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
தலித் நிதி மடைமாற்றமா?:
தலித்துகளுக்கான நிதி மற்ற துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர், “நாங்கள் ஆட்சிக்கு வந்து வெறும் மூன்று மாதங்கள்தான் ஆகியுள்ளன. இந்த மூன்று மாதத்தில் எப்படி நிதி மடைமாற்றம் செய்யப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எப்போதும் மற்ற துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுவது இல்லை. இது குறித்துச் சரியான தரவுகளுடன் நாளை அவையில் விரிவாகப் பேசுவேன்,” என உறுதியளித்தார்.
#VanniArasu #PanchamiLand #HonorKillingAct #DalitRights #TNAssembly #TVKGovernment #ChiefMinisterVijay #ThalapathyVijay #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates