அனுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தில்லையடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற முச்சக்கர வண்டி மீது மோதிஅருகில் இருந்த இருமாடி கட்டடத்தின் தூணில் மோதி நின்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் வேன் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த 10 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். எனினும், காயமடைந்த 5 பேர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.