யாழ்ப்பாணம் நீராவிஅடி அன்னை சந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவைப் பாதையினை குறித்த அமைச்சருடன் கலந்துரையாடி அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
நேற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அன்னை சந்திர வீதியில் இருக்கும் புகையிரதக் கடவை மூடப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் சுட்டிக்காட்டப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.