நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடர்களால் நாடளாவிய ரீதியில் 24 இலட்சத்து 87114 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2026.01.15 ஆம் திகதியளவில் 4 இலட்சத்து 26963 பேருக்கு 25 ஆயிரம் ரூபா முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 1 இலட்சத்து 44377 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் 6088 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 210 வீட்டு பயனாளர்களுக்கு ஆரம்பக்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 18889 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 2992 வீட்டு பயனாளர்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 98.07 சதவீதமானோருக்கும், 50 ஆயிரம் ரூபா 86 சதவீதமானோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள தரப்பினருக்குரிய நிதி மாவட்ட செயலகம் ஊடாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது.

அனர்த்தங்களால் 2 இலட்சத்து 07312 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கமைய ஒரு மாணவருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக 15 ஆயிரம் ரூபாவும், ஜனாதிபதி நிதியம் ஊடாக 10 ஆயிரம் ரூபாவும் என்ற அடிப்படையில் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது என்றார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்