சென்னை:
தமிழக முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுள்ள நிலையில், நாளை (மே 11, திங்கட்கிழமை) தமிழகச் சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த முக்கிய கட்டத்திற்கு நகர்கிறார்.
நாளை கூடும் சட்டசபையில், தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா முன்னிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். ஆளுநரின் உத்தரவுப்படி, வரும் மே 13-ம் தேதிக்குள் தவெக தனது பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபிக்க வேண்டும். தவெக-விற்கு 118 என்ற மேஜிக் நம்பரைத் தாண்டி 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், விஜய் அரசு மிக எளிதாகத் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி அமைந்திருப்பதை ஒட்டி, நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடர் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #MajorityTest #ThalapathyVijay #NewGovernmentTN #SpeakerKaruppiah #MLAOathTaking #VijayInAssembly #120MLAs #PoliticalUpdate #NewEraTN #StalinVsVijay #ElectionResults2026 #TamilNews #VictoryForVijay #VijayMakkalIyakkam_“`