நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இன ரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயற்பட்டனர். இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன – அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் டி சில்வா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தனியார் ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஊடக நிறுவனங்கள் மூடப்படுதல், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் செலுத்தப்படாமைஈ முறையாக சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆனால் தனியார் ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக இயங்குவதால் அவர்களின் சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சுக்கு தலையிடுவதற்கான அதிகாரங்கள் குறைவாகும். தொழில் சட்டத்தின் கீழ் அந்த விடயம் இருப்பதால் தொழில் திணைக்களத்தின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான கௌரவம் வழங்கும் வகையில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளரால் சகல ஊடக நிறுவனங்களுக்கும் முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களுக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கமைய எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்காக பட்டய நிறுவனத்தை தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அது கூடிய விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஊடகவியலாளர்களை தொழில்சார் உரிமைகளுடன் கௌரவமாக பணியாற்றக்கூடிய வகையில் பொருத்தமான நிறுவனத்தை அமைக்கும் வகையில் இது அமையும்.

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

Chama

சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்!

October 23, 2026

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும்

Eng

இலங்கை இங்கிலாந்தை வென்றது!

October 23, 2026

பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் தற்போது முடிவுக்கு வந்த இங்கிலாந்துடனான போட்டியில் 429 ஓட்டங்களை

mah

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மஹிந்த நாமலுக்குக் கடிதம்

October 23, 2026

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்

ravikaran11

சைவ மக்களின் சமய மரியாதைக்கு நாட்டில் ஏற்பட்ட அவமதிப்புக்கள் – பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

October 23, 2026

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது

deng

டெங்கு அபாயம் – அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகள்

October 23, 2026

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, ஒரு சிறப்பு நுளம்பு

mullai

முல்லைத்தீவில் சுமார் 7 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

October 23, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 6.97 ஏக்கர் நிலம், பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக

chemmani11111111111111

செம்மணிப் புதைகுழி; நாணயங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்க முடியாது!

October 23, 2026

செம்மணிப் புதைகுழியில் இருந்து சில நாணயங்கள் மீட்கப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்கு உரியவையாகவும் இருந்தன. அத்துடன் புதைகுழியொன்றில்

sau

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

October 23, 2026

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று மாலை

gajendra

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

October 22, 2026

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள்

16930815621492431198

பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை

October 22, 2026

விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற

Easter1

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்

October 22, 2026

இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ்

court-judge-hammer-gavel-696x398

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான வாய்மூல சமர்ப்பணம் நிறைவு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி சமர்ப்பணங்கள்