நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: 5500 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 1651 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டங்களில் 6 குடியிருப்புக்கள் முழுமையாகவும், 234 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

காலநிலை

தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை – பம்பேகம பிரதேசத்தில் 336.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் மேலெழக்கூடும்

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 மீற்றர் முதல் 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதனால் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்துக்காணப்படுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்கள் இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் என்பவற்றால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலையில் தெரணியகல, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரியில் இரத்தினபுரி, அயாகம, குருவிட்ட மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயாவை அண்மித்த மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கடும் மழையுடனான காலநிலை காரணமாக, அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாகப் பல நதிப் படுகைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

துனமலே நீர்மானி நிலையத்தின் தரவுகளின்படி, ஏற்கனவே 200 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அத்தனகலு ஓயாவின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியின் சில இடங்களில் 250 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கம்பஹா, கட்டான மற்றும் வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து பாதிப்பு

பெய்து வரும் பலத்த மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், கொழும்பு – அவிசாவளை வீதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி புவக்பிட்டிய தும்மோதரை சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா, அத்துடன் யட்டியாந்தோட்டை ஆகிய சில இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. வெள்ளப் பெருக்கு காரணமாக உடுபிட்டிய பகுதியில் தெல்கொட – பெலும்மஹர வீதியிலான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

கம்பஹா மிரிஸ்வத்தை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்குத் தடைபட்டிருந்தது. மேலும், உல்லாலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகத் திவுலபிட்டிய – மீரிகம வீதியில் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.