தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் தொலைந்த நகை உரிய மாணவியிடம் ஒப்படைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் உரிய மாணவியிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஜூலை 25ஆம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தில் பெறுமதியான தங்க நகை ஒன்று கிடந்த நிலையில், அதனை கலை கலாசார பீடத்தின் மொழித்துறையில் விசேட தரத்தில் கல்வி கற்றுவரும், பேருவலை, தர்கா நகரைச் சேர்ந்த எம். ஏ. பி. அப்றா என்ற மாணவி கண்டெடுத்துள்ளார்.

குறித்த நகையை அவர் எவ்வித தயக்கமுமின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். ஐ. பாத்திமா சப்னாவிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் அது பதிவாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், நகையின் உரிமையாளரை அடையாளம் கண்டு அவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் பதிவாளர் மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த தங்க நகையின் உரிமையாளர் பொத்துவிலைச் சேர்ந்த மு. அ. பாத்திமா அன்பால் என அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, திங்கட்கிழமை (11) ​அன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த நகை உரிய மாணவியிடம் உத்தியோகபூர்வமாக மீளக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பதிவாளர் எம். ஐ. நௌபர், பிரதி பதிவாளர் எப். பாரிஷா எம். ஹசன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம். ரீ. அகமட் அஸ்ஹர், விரிவுரையாளர் எம். ஐ. பாத்திமா சப்னா மற்றும் மாணவியின் தந்தை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நகையின் உரிமையாளரான மாணவி, “தாம் தொலைத்த பெறுமதியான நகையை நேர்மையாகக் கண்டெடுத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்த எம். ஏ. பி. அப்றா என்ற மாணவிக்கும், அதனை உரியவரிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்” என்றார்.

பெறுமதியான பொருளைக் கண்டெடுத்தும் அதனைத் தன்வசம் வைத்துக்கொள்ளாமல் உரிய நிர்வாகத்திடம் ஒப்படைத்த மாணவி அப்றாவின் செயற்பாடு, நேர்மை, பொறுப்பு மற்றும் மனிதநேயத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகப் பல்கலைக்கழக சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக