சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முடிவு என்ன என்பது இன்று தெரியவரும்.
தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக உயர்நிலைக் குழு நேற்று தீவிரமாக ஆலோசித்தது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கையின் அடிப்படையில், புதிய அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என்றும், துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதேவேளையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தவெக-விற்கு ஆதரவு இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது விஜய்க்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே விஜய்யால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்ற சூழலில், தொல். திருமாவளவன் இன்று வெளியிடப்போகும் அறிவிப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Thirumavalavan #VCK #Vijay #TVK #BreakingNews #May9 #TamilNaduPolitics #AllianceTalks #MajorityTest #ThalapathyVijay #VijayAsCM #PowerSharing #DeputyCM #StalinVsVijay #ElectionResults2026 #PoliticalCrisis #NewGovernmentTN #AssemblyUpdate #TamilNews #VijayMakkalIyakkam_“`