தியாகதீபம் திலீபன் நினைவேந்தலைச் சிதைக்கும் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது !

தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற நிலையில், அவரது நினைவிடத்தில் நிறுவப்பட்டிருந்த திருவுருவச் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய திலீபன் அவர்கள், தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உணவும் நீரும் அருந்தாமல் 12 நாட்கள் போராடி, செப்டம்பர் 26ஆம் தேதி தனது உயிரைத் தியாகம் செய்தார். அவரது போராட்டம், 1987 இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னணியில் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடனும் தொடர்புடையதாகும்.
தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழ் ஈழத்தில், தங்களது வரலாற்றுத் தியாகியை நினைவுகூர்வதற்குக்கூட தடைகளும் கட்டுப்பாடுகளும் தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்ற நிலையில், அவரது சொந்த மண்ணில் நினைவுச் சின்னமே அகற்றப்படுவது, ஈழத் தமிழர்களின் நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. தமிழர்களின் வரலாற்றையும் தியாகங்களையும் அழிக்கும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலைச் சிதைக்கும் இந்த நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழர்களும் இந்த நடவடிக்கைக்கு ஒருசேரக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு உரிய கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
தியாகதீபம் திலீபன் அவர்கள் இந்திய அரசை நோக்கி தனது உயிரைப் பணயம் வைத்து போராடிய வரலாற்றுப் பின்னணியையும், 1987 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய ஒன்றிய அரசு இச்சம்பவத்தை மௌனமாகக் கடந்து செல்லாமல், இலங்கை அரசாங்கத்திடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதாக இந்திய அரசின் செயல்பாடு அமைய வேண்டும். மேலும், இலங்கை அரசு இச்சம்பவத்திற்கான வெளிப்படையான விளக்கத்தை அளித்து, தமிழர்களின் அமைதியான நினைவேந்தல் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
நினைவுச் சின்னத்தை அகற்றலாம். தமிழர்களின் நினைவிலிருந்து தியாகதீபம் திலீபனை அகற்ற முடியாது. தமிழர்களின் உரிமைக்காகத் தனது இன்னுயிரை ஈந்த தியாகதீபம் திலீபன் அவர்களின் தியாகத்தை உலகத் தமிழர்கள் என்றும் நினைவில் கொண்டிருப்பார்கள். தமிழர்களின் நினைவேந்தல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகள் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
826047743_2538007303334500_2249341759957978704_n

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி, தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலையை அகற்றிச் சென்ற சிறீலங்கா அரச பேரினவாத அடக்குமுறைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கண்டனம்.

September 28, 2026

நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலை அகக்கப்பட்ட சம்பவத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கடும் கண்டனத்தைப்

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

தியாகதீபம் திலீபன் நினைவேந்தலைச் சிதைக்கும் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது !

September 28, 2026

தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களின்

anojan

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு – தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுதி அரசிற்கு கூட்டாக கடிதம்

September 28, 2026

சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் இளைஞன் அனோஜன் சிவராஜாவிற்கு சவுதி அரேபிய பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ் முஸ்லீம்

Tilvin-Silva

அரசாங்கத்திற்கு ஒரு கனா உள்ளது: JVP பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

September 28, 2026

கொழும்பு — மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் பயணத்தின் மையப்புள்ளியாக விளங்கி வரும் பொதுச்செயலாளர்

6782fb3c716c261e919e414f97ff66c2

“யாழ்ப்பாணத்தில் காருக்குள் காத்திருந்த ஷாக்!” – கட்டுக்கட்டான பெருந்தொகைப் பணம், கூரிய ஆயுதங்களுடன் பெண் உட்பட 9 பேர் அதிரடிக் கைது!

September 28, 2026

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் பெருந்தொகைப் பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக்

3

“திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்!” – சிலை அகற்றிய விவகாரத்தில் முட்டி மோதும் தமிழ்த் தரப்புகளுக்கு ந. பொன்ராசா கண்டனம்!

September 28, 2026

யாழ்ப்பாணம்: தமிழினம் இறைவனாக மதித்துப் போற்றும் திலீபனை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்

2

“இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!” – பொதுமக்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவுறுத்தல்!

September 28, 2026

கொழும்பு: இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர

26-6ab00609bf886

“சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் விவகாரம்!” – அவசரமாக சவூதி அரேபியா செல்லும் அரசியல் பிரதிநிதிகள் குழு!

September 28, 2026

கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின்

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

ஈகச்சுடர் திலீபன் சிலை அகற்றம்: சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது

September 28, 2026

ஈழமண்ணில் ஈகச்சுடர் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள -பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று (செப்டம்பர் 27) அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூரில்

achchuvel

அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பாடசாலை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

September 28, 2026

அச்சுவேலி பகுதியில் இயங்கிவரும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான காணொளியொன்று கடந்த சில தினங்களாக

uk chi

வடக்கு லண்டனில் இலங்கை வம்சாளி சிறுமி விபத்தில் பலி

September 28, 2026

வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பரிதாபமாக

nada

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனிலிருந்து இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்!

September 28, 2026

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இந்தியா வரை முன்னெடுக்கப்படவுள்ள மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரில்