தஞ்சை:
கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதைத் தவெக அரசு தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் தஞ்சையில் திமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசிய கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதலமைச்சர் விஜய் வாயைத் திறந்து பேசவில்லை. முதலமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள், நடிகை ஒருவரின் பெயரைக் கூறிக் கூச்சலிட்டனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்… நான் காவிரியைச் சொன்னேன்” என்று கூறினார். ஒரு முக்கியப் பொறுப்பில் இருப்பவர் பொதுக்கூட்டத்தில் இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பதாகக் கூறி, அவரது இந்தப் பேச்சுக்குப் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
#UdhayanidhiStalin #DMK #ControversialSpeech #ThanjavurProtest #TVKGovt #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #CauveryIssue #PoliticalUpdate #TamilNewsLive