செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது சில என்புத் தொகுதிகள் மண்டையோடு (தலை) இல்லாமல் அடையாளம் காணப்பட்டிருந்தன.
அந்த எலும்புக்கூட்டுகளின் தலைப்பகுதி இல்லாத நிலைக்கான உரிய காரணங்கள் முழுமையான ஆய்வின் பின்பே வெளிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு குவியல்களாக சில என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக இதுவரை 34 எலும்புக் குவியல்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட எலும்புக் குவியல்களுக்குள் மண்டை ஓட்டு துண்டுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் அவற்றின் ஆய்வுகளின் பின்னரே குறித்த குவியல்களாக அடையாளம் காணப்பட்ட மண்டையோட்டுத் துண்டுகள், மண்டையோடு இல்லாமல் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளினுடையதா என்று உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்டையோட்டுத் தொகுதிகள், மண்டையோட்டுத் தொகுதிகள் இல்லாமல் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளோடு தொடர்புடையதா இல்லையா என்பது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வின் பின்னரே அறியக்கூடியதாக இருக்கும்.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 467ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 444 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.