தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மட்டும் தீர்மானிக்க முடியாது – ஐங்கரநேசன் 

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவருவது தொடர்பாக தமிழ் அரசியல் வெளியில் அதிகம் பேசப்படுகின்றது. இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தீர்வாக எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக தமிழர் தரப்பில் காலத்துக்கு காலம் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுவந்துள்ளன.
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு இத்தகைய முன்மொழிவுகள்தாம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்ட வரைபும் குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அரசியல் கட்சிகளுடன் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மட்டும் தீர்மானிக்க முடியாது. இதில் பொதுமக்கள் சார்பாக சிவில் அமைப்புகளின் பங்கேற்பும் அவசியம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரவையின் மே தினப் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாமல் போய்விட்டது. யுத்தம் முடிந்து பதினேழு வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லவல்ல, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பொதுவான தலைமை தமிழ் மக்களிடையே உருவாகவில்லை.
எங்களிடம் இருப்பவர்கள் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே. இவர்கள் அதிகாரங்களை எப்படிக் கைப்பற்றுவது என்பது பற்றியும், அதிகாரத்துக்கு வந்துவிட்டபின்னர் அதிகாரப்பசி மேலோங்கி பதவிகளில் தாங்கள் எப்படி நீடிப்பது என்பது பற்றியுமே சிந்திக்கிறார்கள்.
தங்கள் கட்சிகளை முதன்மைப்படுத்துவது பற்றியும், அடுத்த தேர்தலில் தாங்கள் எவ்வாறு வெல்வது என்பது பற்றியுமே இவர்கள் யோசிக்கின்றார்கள். இவர்களில் பலர் தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் அரசுக்கு இன்னொரு முகமும் காட்டி அரசிடம் இருந்து தங்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெறுவதில் மாத்திரமே குறியாக இருக்கிறார்கள். இதுவே கடந்தகால தமிழர் அரசியல் வரலாறாக உள்ளது.
சிவில் அமைப்புகள் தாங்கள் ஒருபோதும் நேரடியாக அரசியல் அதிகாரத்துக்கு வர விரும்புவதில்லை. அவ்வாறு விரும்பினால் அவை உண்மையான குடிசார் அமைப்புகள் இல்லை. இவற்றின் பணி அரசியல்வாதிகளின் அதிகாரங்களைக் கண்காணிப்பதாகும் .
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள் பேரவை, அதன் இணைத்தலைவர்களில் ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்ததும் தன் ஆயுளை முடித்துக்கொண்டது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய மக்கள் இயக்கம் இன்று அதே வீச்சுடன் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய குடிசார் அமைப்புகளும் சிதறிப்போய்விட்டது.
இந்த வரலாறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிவில் அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அதுவும் அரசியல் தீர்வு என்ற முன்னெடுப்புகள் மீண்டும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் சிவில் அமைப்புகள் இவ்விடயத்தில் தங்கள் வகிபாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வினைத்திறனுடன் செயலாற்ற முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு