டிக்கோயா பிணவறைச் சம்பவம்: ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட்டு முறையான சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைதிவழிக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸாரினால் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்குச் சென்று, பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

“எமது சமூகத்தில் தவறு நடக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தால், அதனைச் சிலர் அரசியல் செயற்பாடு எனச் சித்தரிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இது அரசியல் சார்ந்த அல்லது தேர்தல் தொடர்பான விவகாரம் அல்ல. ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. இது குறித்து அரசாங்கத்திடமிருந்து ஒரு தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றோம்.

சம்பவம் நடந்த இரவு வேளையில் பிணவறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் மூன்று ஊழியர்களையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு விசாரணை நடத்துவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறானதொரு சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் இடம்பெற்றிருந்தால், அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது ஜனாதிபதி அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நாங்கள் இன்று பாரிய போராட்டத்தை நடத்த முற்படவில்லை, அமைதியான முறையிலான ஒரு கவனயீர்ப்பையே முன்னெடுக்கவிருந்தோம். இன்று ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகரைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.

இச்சம்பவம் குறித்து இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எமக்கு உறுதி வழங்கியுள்ளார்” என்றார்.

IMG_8440

ஜெம் வீரமணி வழக்கு: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

September 24, 2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய

IMG_8439

அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி?

September 24, 2026

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து த.வெ.க-வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்

IMG_8438

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலவச அனுமதி!

September 24, 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நான்கு விலங்கியல் பூங்காக்களுக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்

IMG_8437

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

September 24, 2026

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. லீட்ஸ்

IMG_8436

தீவிரமடையும் காலநிலை!

September 24, 2026

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின்

IMG_8435

நாளை நடைபெறவிருந்த இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

September 24, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நாளை (25) இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, இந்தியத் தரப்பில் ஏற்பட்ட

IMG_8434

அனோஜன் விவகாரம்!

September 24, 2026

இலங்கை அரசு சவூதியை நாடிய பின்னரே இந்தியா தலையிட முடியும்! அனோஜன் விவகாரம் குறித்து மனோவிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

IMG_8433

திலீபன் நினைவேந்தல் ஒலிபெருக்கிகள் பறிப்பு!

September 24, 2026

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஒலிபெருக்கிப் பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை மற்றும் பொலிஸாரால் ஒலிபெருக்கிகள்

sajith jj

எங்களது ஆட்சியில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இரத்து செய்யப்படும்: சஜித் பிரேமதாச ஆவேசம்!

September 24, 2026

தற்போதைய அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்க முயல்வதாக எதிர்க்கட்சித்

sumanth

அனோஜனைக் காப்பாற்றும் முயற்சிகளைப் பொதுக்கருத்துக்கள் பாதிக்கக்கூடும்: எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை!

September 24, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் உயீரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்

shiran

எஃப்.சி.ஐ.டி (FCID) விசாரணைக்கு ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ஷ: புதிய திகதி கோரி கோரிக்கை!

September 24, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்

toronto mayor election

டொரண்டோ தேர்தல் களம்: பின்னால் இருந்து இயக்கும் ‘நிழல் அமைப்புகள்’ –

September 24, 2026

டொரண்டோ மாநகராட்சித் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடும் வேட்பாளர்களைக் காட்டிலும், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் மறைமுக அரசியல் அமைப்புகளே (Third-Party