சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்த தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள மகாநாயக்க தேரர்கள் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை முழுமையாக மதிக்கும் அதேவேளையில் ஒரு பௌத்த துறவியின் காவி உடையை அகற்றுவதையோ அல்லது அவரது துறவற நிலையை முடிவிற்கு கொண்டுவருவதையோ வெறும் சிறைச்சாலை விதிகளின் அடிப்படையிலான நிர்வாக விடயமாக கருதமுடியாது.
இத்தகைய முடிவுகள் மகாசங்கத்தினரின் தீர்மானங்களுக்கு உட்பட்டவை.
சிறைச்சாலை விதிமுறைகளின் படி தண்டனை பெற்ற கைதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்போது தண்டனைக்கு முன்னர் அவர்கள் எத்தகைய ஆடைகளை அணிவதற்கு பழகியிருந்தார்களே அதற்கு இணையான சாதாரண ஆடைகளை அணிவதற்கு அனுமதிக்கவேண்டு;ம்.
ஒரு பௌத்ததுறவியை பொருத்தவரை சாதாரண உடை என்பது சாதாரண பொதுமக்கள் உடுத்தும் உடையல்ல,மாறாக அவரது காவி உடைகளையே குறிக்கும்.
எனவே ஞானசார தேரர் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற விசாரணைகளின் போது பௌத்தமத துறவிக்கான ஆடையில் ஆஜராவதற்கு அனுமதிக்கவேண்டும் என மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்