லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
-
பிணை நிபந்தனைகள்: தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அடுத்த விசாரணை: இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
-
குற்றச்சாட்டு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் (Ethanol) நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக லங்கா சதொச நிறுவனத்தின் லொறியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
கைது செய்யப்பட்டவர்கள்: இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் அவரது மூத்த மகன் ஜோஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோரும் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.