சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும்என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிணை மனு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேஷன் சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும், சங்கீத்சன் சார்பில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை அல்லது, எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சங்கீத்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்