செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அபாயமானது ஜெனிவாவில் ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய

செயற்கை நுண்ணறிவு என்பது முற்றிலும் சந்தை சக்திகளுக்கு ஏற்ப மட்டுமே வளர்ச்சியடைந்தால், உலகின் குறைந்த வளங்களைக் கொண்ட பல மொழிகளும், அவற்றின் இன மற்றும் கலாசாரச் சூழல்களும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. என்று டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 2026 உலக தகவல் சமூக உச்சிமாநாட்டின் ‘தலைவர்கள் கலந்துரையாடல்’ அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஒவ்வொரு பெரிய தொழில்நுட்பப் புரட்சியும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான தடைகளைக் குறைத்துள்ளன. ஆனால், அவை எப்போதும் அனைவருக்கும் சமமானதாக இருந்ததில்லை.

இணையம் என்பது தகவல்களைப் பெற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தியது உண்மை தான். ஆனால், மொழி, எழுத்தறிவு மற்றும் இணைய இணைப்பு போன்ற காரணிகளே அதிலிருந்து யார் முழுமையாகப் பயனடையலாம் என்பதைத் தீர்மானித்தன.

இப்போது, செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கையான தகவல் தொடர்பு மூலம் அறிவையும் புரிதலையும் எளிமையாகப் பெற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அத்துடன், அது மொழி, சூழல் மற்றும் தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியது.

இந்த செயற்கை நுண்ணறிவு புரட்சிகரமானது ஆனால், செயற்கை நுண்ணறிவு என்பது முற்றிலும் சந்தை சக்திகளுக்கு ஏற்ப மட்டுமே வளர்ச்சியடைந்தால், அது வணிக ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சந்தைகளுக்கும், அதற்குரிய மொழி வடிவங்களுக்கும் மட்டுமே இயற்கையாகவே முன்னுரிமை அளிக்கும். மேலும், அது உயர்மட்டத் தரவுத்தொகுப்புகளைக் கொண்டு பயிற்சி பெற்று, வசதி படைத்த மற்றும் ஒரே மாதிரியான சமூகங்களின் சூழலில் இருந்தே முடிவுகளைக் கற்றறியும்.

இதனால், உலகின் குறைந்த வளங்களைக் கொண்ட பல மொழிகளும், அவற்றின் இன மற்றும் கலாசாரச் சூழல்களும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் பன்மொழித் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவாக மட்டும் இருக்க முடியாது. அது கலாசார ரீதியாகவும் அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவாக இருக்க வேண்டும்.

அதாவது, உள்ளுர் சூழலையும் அறிவையும் தன்னுள் பதித்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மற்றும் நாகரிகத்திலிருந்து அறிவைப் பெற்று, சமூகங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் தொழில்நுட்பமாக அது இருக்க வேண்டும்.

2500 ஆண்டுகாலப் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்ட, பன்மொழி மற்றும் பல்லின சமூகப் பின்னணியைக் கொண்ட இலங்கையின் ‘செயற்கை நுண்ணறிவுக்கு முதலிடம்’ என்ற டிஜிட்டல் உருமாற்றமானது, இதிலுள்ள வாய்ப்பையும் சவாலையும் ஒரே நேரத்தில் விளக்குகிறது.

இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதார டிஜிட்டல் உருமாற்ற வரைபடமானது, மொழிச் சமன்பாட்டுத் திறன்களை கிடைமட்ட டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளாக நிலைநிறுத்துகிறது.

இன மற்றும் கலாசார நுணுக்கங்களைக் கிரகிக்கும் வகையிலான யுஐ டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளை பயன்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.

இந்த மாதிரியின் முதலாவது வடிவமானது, மக்களுடன் இயற்கையான உரையாடல்கள் மூலம் தொடர்புகொள்ளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ‘அரசாங்க தகவல் நிலையத்தின்;’ ஊடாக, மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும்.

ஒரு விவசாயி விவசாய- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்வார், ஒரு குழந்தை ஒரு கற்பிக்கும் ஆசிரியரை அணுகும். இவை அனைத்தும் இயற்கையான மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு செழுமைப்படுத்தப்பட்ட உரையாடல்களின் மூலம் சாத்தியமாகும். மாற்றுத்திறனாளிகள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய மாதிரிகளைப் பயன்படுத்துவார்கள்.

டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அணுகுமுறை, தலைமுறை தலைமுறையாக நிலவி வரும் தடைகளைக் குறைக்கும். சுயாதீன செயற்கை நுண்ணறிவை சமமாக அணுக முடியாமை, இந்த அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு என்ற இலட்சியத்துக்கு சவாலாக அமைகிறது.

சிறிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்களுக்குரிய சுயாதிக்க செயற்கை நுண்ணறிவின் குறைந்தபட்ச அளவையாவது அணுகுவதை கூட்டு நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களின் தரவுத் தனியுரிமை, கொள்கை சுயாட்சி அல்லது தேசிய நெகிழ்ச்சித்திறன் ஆகியவற்றை சமரசம் செய்யாமல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தங்களுக்கு ஏற்றவாறு உள்ளூர்மயமாக்க முடியும்.

எமது குறிக்கோள் என்பது தகவல்களை கிடைக்கச் செய்வதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. ஒரு நபர் பேசும் மொழி, அவரது திறன்கள் அல்லது அவர் பிறந்த சூழ்நிலைகள் எவையாக இருந்தாலும், ஒவ்வொருவராலும் அந்தத் தகவல்களைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து பயனடையவும் முடிவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

இந்தத் தெரிவுகளை நாம் இன்று நடைமுறைப்படுத்தினால், செயற்கை நுண்ணறிவு என்பது சமத்துவமின்மைக்கான மற்றுமொரு காரணியாக மாறாமல், மனித மேம்பாட்டிற்கும் வாய்ப்புகளின் சமத்துவத்திற்கும் உலகம் கண்டிராத மிக சக்திவாய்ந்ததொரு கருவியாக மாறும் என்றார்.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்