உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க நமக்குக் கட்டாயம் தேவை – பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ

மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் மற்றும் எல் நினோ காலநிலை மாற்றங்கள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமாயின், இலங்கை தனது உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மட்டுமே ஒரே தீர்வாகும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, கடன் மறுசீரமைப்பு மற்றும் வாகன இறக்குமதி வரிகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய […]
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அபாயமானது ஜெனிவாவில் ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய

செயற்கை நுண்ணறிவு என்பது முற்றிலும் சந்தை சக்திகளுக்கு ஏற்ப மட்டுமே வளர்ச்சியடைந்தால், உலகின் குறைந்த வளங்களைக் கொண்ட பல மொழிகளும், அவற்றின் இன மற்றும் கலாசாரச் சூழல்களும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. என்று டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற 2026 உலக தகவல் சமூக உச்சிமாநாட்டின் ‘தலைவர்கள் கலந்துரையாடல்’ அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒவ்வொரு பெரிய […]
முந்தைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது!

முந்தைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறி, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஜனநாயக நாட்டின் தூண்களாக விளங்கும் சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகங்களை அழித்துவிட்டு […]
19 முதலீட்டாளர்கள் மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்யவிருப்பம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு 19 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு தெரிவிக்கையில், மத்தள விமான நிலையம் தொடர்பான முதலீட்டு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள் மிக விரைவில் மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது. பொது-தனியார் […]
உயர்ந்த மட்டத்தில் தேசிய பாதுகாப்பு உள்ளது

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் சூழ்நிலைகள் காரணமாக பொதுப்பாதுகாப்பு தொடர்பான சில கவலைகள் எழுந்தபோதிலும், அந்தப் பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன், தானும் தனது குழுவினரும் அரசியலமைப்பு மற்றும் […]
அவசரகாலக் கடன் பெற வேண்டாமென அரசு எச்சரிக்கை
அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கணினி அவசரகால உதவி மன்றம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும், எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், 101 என்ற எண்ணிற்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரகாலக் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறும் செய்திகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. […]
மட்டக்களப்பு தற்காலிக பாலம் திறப்பு!

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் இந்த பாலம் உடைந்து வீழ்ந்த நிலையில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாலம் உடைந்துவீழ்ந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக பெய்லி பாலம் ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அனுப்பி […]
ஈரானை முழுமையாக அழிக்க 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய ஈரான் அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால், உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த 1000 ஏவுகணைகள் […]
கிளிநொச்சியில் பாலத்துடன் மோதுண்ட கெப் ரக வாகனம்

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று பரந்தன் வீதியூடாக முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் வாகனத்தின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
த.வெ.க., தி.மு.க. ஏன் ஒரே அணியில் இருக்கக்கூடாது? – திருமாவளவன் கேள்வி

காஞ்சிபுரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்தில், த.வெ.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்ப்பதால் ஏன் ஒரே அணியில் இணையக்கூடாது என்று விடுத்துள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், த.வெ.க.வும் தி.மு.க.வும் தங்களது தனிப்பட்ட முரண்பாடுகளைத் தாண்டி பொது எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்றிணைய […]